காலை டிபனுக்கு கமகமனு ருசியான தாளித்த தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

தோசை அப்படிச் சொன்னாலே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். அப்படி ரொம்ப ரொம்ப சுவையான தோசைகளில் பல பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருக்கோம். சைவ தோசை, அசைவ தோசை இது எல்லா வகைகளையும் சாப்பிட்டு இருப்போம். இப்படி எத்தனை வகைகளை சாப்பிட்டு இருந்தாலும் தோசையா ரொம்ப விரும்பி சாப்பிடுறவங்க அந்த தோசைல என்ன மாதிரி வெரைட்டி செய்தாலும் ரொம்ப ரசித்து சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

அந்த மாதிரி இன்னிக்கு எதுவுமே இல்லாமல் ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் பண்ணி அந்த தோசை செய்து சாப்பிட்டு இருக்கோம் அதுதான் தாளிச்ச தோசை உங்க வீட்ல  புளிப்பு கொஞ்சம் அதிகமா தோசை மாவு இருக்கு அப்படினா நீங்க இந்த மாதிரி தோசையை தாளிச்சு சாப்பிட்டீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும். இட்லிக்கு அரைச்ச மாவு கடைசியா இருக்கும் போது அந்த மாவுல கொஞ்சம் அதிகமாகவே புளிப்பு இருக்கும்.

- Advertisement -

அப்படி அந்த மாவு புளிச்ச  மாதிரி ஸ்மெல் வருது இல்ல சுவை புளிப்பா இருக்கு அப்படின்னா நீங்க அதுல இந்த மாதிரி சிம்பிளா ஒரு வேலையை மட்டும் பார்த்தீங்களா தோசையில புளிப்பே தெரியாம இந்த தாளிச்ச தோசை ரொம்ப சுவையா இருக்கும். இந்த மாதிரி தோசையை தாளிச்சு கொடுக்கும் போது வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாரும் விரும்பியும் சாப்பிடுவாங்க கடைசியான மாவு வீணா போயிருச்சு அப்படின்னு நினைச்சு நீங்க கீழேயும் ஊத்த வேண்டாம்.

இப்படி இது மாதிரி தோசை ஊத்தி சாப்பிடும் போது தோசை மாவுல இருக்கிற புளிப்பும் தெரியாது நல்ல சுவையாகவும் இருக்கும் எல்லாரும் விரும்பியும் சாப்பிடுவாங்க மாவும் உங்களுக்கு வீணா போகாது . இந்த மாதிரி சுவையான தாளிச்ச தோசை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம். ரொம்ப ஈஸியா ரொம்ப ரொம்ப எளிமையா செய்யக்கூடிய ஒரு தோசை தான் இந்த தாளிச்ச தோசை.

Print
5 from 1 vote

தாளித்த தோசை | Thallicha Dosai Recipe In Tamil

இன்னிக்கு எதுவுமே இல்லாமல் ரொம்ப ரொம்ப சிம்பிளா ஒரு விஷயம் பண்ணி அந்த தோசை செய்து சாப்பிட்டுஇருக்கோம் அதுதான் தாளிச்ச தோசை உங்க வீட்ல புளிப்பு கொஞ்சம் அதிகமா தோசை மாவு இருக்கு அப்படினா நீங்க இந்த மாதிரி தோசையைதாளிச்சு சாப்பிட்டீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும். இட்லிக்கு அரைச்ச மாவு கடைசியாஇருக்கும் போது அந்த மாவுல கொஞ்சம் அதிகமாகவே புளிப்பு இருக்கும். இந்த மாதிரி சுவையான தாளிச்ச தோசை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம். ரொம்ப ஈஸியா ரொம்ப ரொம்பஎளிமையா செய்யக்கூடிய ஒரு தோசை தான் இந்த தாளிச்ச தோசை.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Thaalitha Dosai
Yield: 4
Calories: 80kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் இட்லி மாவு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்துக்கொள்ளவும். பிறகு அதில் உளுந்து , கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய பொருட்கள் ஆறிய பிறகு மாவில்  சேர்த்து நன்றாக கலந்துஅதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளவும் தேவைபட்டால்  உப்பு சேர்த்து கொள்ளவும்.
  • பிறகு மாவை தோசைகளாக வார்த்து இரண்டு புறமும் திருப்பி போட்டு தோசை வெந்து பிறகு எடுத்து இந்ததோசையை சூடாக பரிமாறினால் சுவையான தாளித்த தோசை தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 80kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Fat: 2g | Saturated Fat: 1.2g | Sodium: 10mg | Potassium: 382mg | Fiber: 14g | Iron: 2mg

இதையும் படியுங்கள் : இனி சுரைக்காய் வாங்கினால் ருசியான பொரியல் இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்!

-விளம்பரம்-