- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவா அந்த காலத்துல எல்லாம் பெருசா குழம்பு காய் கூட்டு பொரியல் அப்படின்னு எதுவும் செய்ய மாட்டாங்க. அம்மிக் கல்லில் அரைச்ச கொள்ளு துவையல் தேங்காய் துவையல் வர மிளகாய் துவையல் இதைத்தான் சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிடுவாங்க. அப்படி இல்லனா தண்ணி சோறு சாப்பிட்டுவிட்டு துவையல் தொட்டுக்க வச்சுப்பாங்க. இப்பதான் நம்ம டெய்லியும் சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் அப்படின்னு விதவிதமா செய்றோம். ஆனா அந்த காலத்துல எல்லாம் அந்த மாதிரி கிடையாது ஆனால் அந்த காலத்தில் சமையல் இன்னுமே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இன்னும் நிறைய பேரு வீட்டுல அந்த காலத்து சமையல் சமைச்சிட்டு தான் இருக்காங்க. அந்த வகையில ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா ரொம்ப சிம்பிளா இருக்கக்கூடிய தேங்காய் துவையல் ரெசிபி தான் இப்ப நம்ம பாக்க போறோம். பாரம்பரியமான முறையில் இந்த தேங்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். அப்ப எல்லாரும் இந்த தேங்காய் துவையிலேயே சாதத்திலையும் போட்டு பிசைஞ்சு சாப்பிடுவாங்க அதே மாதிரி நம்மளும் இன்னைக்கு செய்யப்போற இந்த தேங்காய் துவையல சாதத்துல போட்டு அது மேல கொஞ்சமா நெய் ஊத்தி பிசைஞ்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.
இல்லநா பழைய சாதம் சுடு கஞ்சி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். புளி சாதம் ரசம் சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் இதுக்குமே இந்த தேங்காய் துவையல் சைட் டிஷ்ஷா சாப்பிட சூப்பரா இருக்கும். ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்பறம் அடிக்கடி செய்வீங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரி இதுக்குமே இந்த தேங்காய் துவையல் நல்லா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான தேங்காய் துவையல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வறுத்து அரைச்ச ருசியான தேங்காய் சட்னி இனி இப்படி வீட்டில் செஞ்சி கொடுங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் தேங்காய் புளி காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கியதும் மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான தேங்காய் துவையல் தயார்.






