ஆரோக்கியமான தினை பொட்டுக்கடலை உருண்டை, . குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்!!!
சிறுதானியங்கள் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நான் வெள்ளை சாதம் சாப்பிடுவதை விட சிறுதானியத்தில் சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஆனால் நம்மால் அனைத்து சிறு தானியங்களையும் சமைத்த உண்ண முடியாது. எனவே அந்த சிறுதானியங்களை வைத்து நாம் பலவிதமான உணவுக
சிறுதானியங்கள் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நான் வெள்ளை சாதம் சாப்பிடுவதை விட சிறுதானியத்தில் சமைத்து சாப்பிட்டால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஆனால் நம்மால் அனைத்து சிறு தானியங்களையும் சமைத்த உண்ண முடியாது.
எனவே அந்த சிறுதானியங்களை வைத்து நாம் பலவிதமான உணவுகள் சமைத்து உண்ணலாம். தினை, வரகு ,சாமை, கேழ்வரகு, குதிரைவாலி என பல வகையான சிறுதானியங்கள் உண்டு. இந்த சிறுதானியங்களில் நாம் வெண்பொங்கல் பிரியாணி இட்லி தோசை என பல விதமான உணவுகளை உண்ணலாம். அதிலும் தினை மாவு நம் உடலுக்கு மிகவும் நல்லது இதில் பொதுவாக அதிரசம் செய்வார்கள்.
ஆனால் இன்று நாம் தினையை வைத்து திணை பொட்டுக்கடலை உருண்டை செய்யப் போகிறோம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக இந்த திணை பொட்டுக்கடலை உருண்டையை கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முழுவதுமாக இயற்கையான பொருட்களை வைத்து இதை நாம் செய்வதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். வாங்க இந்த திணை பொட்டுக்கடலை உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.