ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக மழை வெயில் என பார்க்காமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம் அப்படி கடினமாக நாம் உழைத்தாலும் கூட அதற்கான பலன் நமக்கு முழுவதுமாக கிடைப்பதில்லை நம்மிடம் இருக்கின்ற பணம் நிலையாக இருந்தாலே நாம் வாழ்க்கையில் பண பிரச்சினைகள் இல்லாமல் இருக்க முடியும் ஆனால் பணம் வீண்விரயமாகி கொண்டிருக்கும் இல்லையென்றால் நம்மிடம் நிலையாக நிக்காமல் இருக்கும் அப்படி இல்லாமல் இருந்தால் பணம் நம்மிடம் நிலையாக நிலைத்திருப்பதற்கு ஒரு எளிமையான வழிமுறையை பின்பற்ற வேண்டும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பணம்

அனைவருக்கும் பணத்தேவுகள் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதனை பூர்த்தி செய்து கொள்வதற்காக கடினமாக உழைத்து சம்பாதித்து சேர்த்து வைப்போம் ஆனால் அப்படி செய்தாலும் கூட பிற்காலத்தில் அவசரத்திற்காக யாரிடம் ஆவது கடன் வாங்க வேண்டிய சூழலில் ஏற்படும் அனைவருமே பணத்தை சேர்த்து வைக்க தான் ஆசைப்படுவோம் ஆனாலும் கூட ஏதாவது ஒரு அவசர தேவைக்காக மற்றவர் இடத்தில் வாங்கும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டமும் படுவோம் நாம் சம்பாதித்த படம் நம்மிடம் கையில் தங்குவதே இல்லை சேமிக்கவே முடியவில்லை என்ற சூழல் ஏற்படும்போது அது உங்களுக்கு மன கஷ்டமாக அமையும். பணத்தை வீணாக செலவழிப்பவர்களும் இந்த உலகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சம்பாதித்த பணம் நம்மை விட்டு நீங்காமல் இருக்க செய்ய வேண்டியவை
பொதுவாக நம்முடைய பணம் தொலைந்து விட்டால் ஒரு சிலர் நம்மிடம் உழைத்து சம்பாதித்த பணம் நிச்சயமாக வந்தே தீரும் என்று கூற கேட்டிருப்போம். அதேபோல் ஒருவரை ஏமாற்றாமல் நாம் சம்பாதிக்கின்ற பணம் நிச்சயமாக நம்மிடம் இருக்கும் நம்மை விட்டு நீங்காது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் மற்றவர்களை ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள் அப்படி சம்பாதித்தால் அது நிச்சயமாக அடுத்த சந்ததியினருக்கு போய் சேரவே சேராது. எனவே மற்றவர்களை ஏமாற்றி நாம் சம்பாதித்தால் நம்மிடம் பணமோ பொருளோ தாங்காது.
நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கோவில்களுக்கோ ஏழை மக்களுக்கும் தானமாக கொடுப்பது மிகவும் சிறந்தது. அப்படி நாம் தானமாக கொடுக்கும் போது நமக்கே தெரியாமல் நாம் செய்த பாவங்கள் நீங்கி நாம் சம்பாதித்த பணம் நம்மிடம் நிலையாக நிலைத்திருக்கும் அது நம்முடைய சந்ததியினருக்கும் போய் சேரும். நாம் தானமாக ஒரு பொருளை மற்றவருக்கு கொடுக்கும் போது நம்முடைய கர்ம வினைகள் நீங்கி அது நம்மை கஷ்டங்களில் இருந்தும் கூட காப்பாற்றும்.
இதனையும் படியுங்கள் : நிரந்தர பண வரவை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!




