
இன்றைய இளைஞர்களிலிருந்து அனைவரும் புதிதாக வண்டி வாகனம் வாங்குவதில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் வாங்கிய புது வண்டியை வைத்து சாகசம் காட்டும் ஆர்வத்தில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அது அவர்களின் உயிரையும் கூட சில நேரங்களில் பறித்து விடுகிறது. வண்டி வாகனம் வாங்கிய பிறகு அந்த வாகனம் விபத்தில் சேர்க்காமல் இருப்பதற்கு வண்டியில் வைக்க வேண்டிய ஒரு சில பொருட்களைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவுகள் பார்க்கலாம்.
வாகனம் வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்
அஷ்டமி நவமி போன்ற திதிகளில் வண்டி வாங்கவே கூடாது. பொதுவாக எந்த பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் அஷ்டமி நவமி திதியில் வாங்க கூடாது. ஜென்ம நட்சத்திரம் இருக்கக்கூடிய நாட்களில் வாகனங்கள் வாங்க கூடாது. கரிநாள் மரணயோகம் இருக்கக்கூடிய நாட்களிலும் புது வண்டி வாங்கக்கூடாது.
செவ்வாய்க்கிழமை, திங்கள்கிழமை, வியாழக்கிழமை போன்ற மூன்று நாட்களும் வாகனங்கள் வாங்குவதற்கு சிறந்த நாட்கள். இந்த மூன்று நாட்களிலும் மேற்குறிப்பிட்ட திதிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மகம் நட்சத்திரத்தன்று எமகண்ட நேரத்தில் எருமை மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுத்தால் வண்டி வாகனம் விபத்தில் சிக்காது. அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொண்டே இருந்தால் அவர்கள் இதனை பின்பற்றலாம்.
வண்டி வாகனங்களில் ஆஞ்சநேயர் பறந்து செல்வது போல் உள்ள ஒரு ஸ்டிக்கரை வாங்கி ஒட்டிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் முருகனுடைய ரத பந்தம் ஸ்டிக்கர் வாங்கி ஒட்டிக் கொள்ளலாம். இந்த இரண்டு தெய்வங்களின் ஸ்டிக்கர்களும் உங்களுடைய வண்டி வாகனங்களில் இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
வண்டியை இயக்கத் துவங்கும் போது கருட பகவானே துணை என்று கருட பகவானை மனதார நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும்.
இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் என எதுவாக இருந்தாலும் மேல் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு பொருந்தும் வண்டி ஓட்டுபவர்களும் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும். இந்த எளிமையான தகவல்களை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : தரித்திரத்தை கொடுக்கக்கூடிய பத்து பொருட்கள்!





