வறுமையில் இருப்பவர்கள் கோடீஸ்வரராக மாற செய்ய வேண்டியவை!

- Advertisement -

வறுமையில் பிறந்தவர்கள் வறுமையில் இருப்பவர்கள் எப்பொழுதுமே மறுமையிலேயே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. தங்களுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் கோடீஸ்வரராக மாறியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதற்கு நமக்கு தேவை நல்ல கல்வி விடா முயற்சி எதையும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை. ஆனால் அதோடு சேர்த்து இந்த எளிமையான பரிகாரத்தையும் நீங்கள் செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் வறுமை நிலை மாறி நீங்கள் பணக்காரர்களாக மாறலாம்.

-விளம்பரம்-

அசோக மரம்

நிறைய தெய்வ சக்திகள் நிரம்பிய மரம் தான் அசோக மரம். அசோக மரத்திலிருந்து பூ விதை வேர் காய் என பலவிதமான பொருட்கள் நமக்கு கிடைக்கும். இந்த அசோக மரம் நிறைய கோவில்களில் இருக்கும் மேலும் காடுகளில் இந்த மரம் வளர்ந்து இருக்கும். எனவே இந்த அசோக மரத்திலிருந்து ஒரு சில பொருட்களை நாம் எடுக்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு கோவில் அல்லது கரடு முரடான பகுதிகளில் தான் தேட வேண்டும்.

- Advertisement -

அசோக மர பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு அசோக மரத்துடைய பூ நமக்கு தேவைப்படும் உங்கள் வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் இரண்டு அசோக பூவை போட்டு அதில் தேன் ஊற்றி ஊற வைத்தால் உங்களுடைய வீட்டில் உள்ள தரித்திரம் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். மேலும் ஒரு வெள்ளி தாயத்து எடுத்து அதில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை போட்டு அசோக மரத்தினுடைய விதையையும் சேர்த்து உங்களுடைய கழுத்திலோ அல்லது கைகளில் கட்டிக் கொண்டால் உங்களுடைய வருமானம் பல மடங்கு ஆகும் வியாபாரம் செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக வியாபாரம் நன்றாக லாபத்தை கொடுக்கும். வெள்ளிக்கிழமை என்று இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்வது நல்லது.

அசோக மர இலை வழிபாடு

தினமும் வெளியே போகும்போது அசோக மர இலையை உங்கள் கையில் எடுத்துச் சென்றால் நீங்கள் போகும் காரியம் வெற்றி அடையும் அந்த வேலையின் மூலம் உங்களுடைய வாழ்க்கை நிறைவு பெறும் முன்னேற்றமும் ஏற்படும். அசோக மரத்தின் உடைய வேரை எடுத்து அதன் மேல் மஞ்சள் தடவி பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்தால் பணத்தடைகள் விலகும். உங்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்களில் அசோக மரம் இருந்தால் மறக்காமல் முழு நம்பிக்கை ஓடு இதனை செய்து பாருங்கள். மேலும் அசோக மரத்திற்கு தினமும் உங்கள் கைகளால் தண்ணீர் ஊற்றுங்கள் இப்படி செய்தால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் வறுமை நிலை மாறும்‌.

இதனையும் படியுங்கள் : விரும்பிய வேலை கிடைக்க செய்ய வேண்டிய சூரிய பகவான் வழிபாடு!

-விளம்பரம்-