ஒருத்தருடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் நடைபெறும். பிறந்த குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்துவதில் இருந்து அந்தக் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பது வரையில் அனைத்துமே சுப காரியங்கள் தான். அப்படிப்பட்ட சுப காரியங்கள் அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் நடக்க வேண்டும் அப்பொழுது தான் அந்த வாழ்க்கை சிறப்பானதாக அமையும். ஆனால் இன்றைய காலத்தில் ஒரு சிலருக்கு வயது போன பிறகு கூட நடக்க வேண்டிய சுப காரியங்கள் நடக்காது. அப்படிப்பட்ட சுப காரியங்களில் இருக்கக்கூடிய தடைகளை விலக்குவதற்கு இந்த வழிபாட்டு முறையை பின்பற்றலாம் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

சுப காரிய தடை நீங்க செய்ய வேண்டியவை
வீட்டில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால் இனிப்பு செய்து கொண்டாடுவோம் அவ்வாறு இனிப்பு செய்யும் போது அந்த இனிப்பை இறைவனுக்கும் வைத்து வழிபாடு செய்வோம். இன்னும் ஒரு சிலர் விசேஷமான நாட்கள் வரும்போது தெய்வங்களுக்கு பிடித்தமான நெய்வேத்தியத்தை செய்து வைத்து வழிபாடு செய்வார்கள். இதே போல் நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யும்போது நம்முடைய வழிபாட்டிற்குரிய பலன்கள் விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் ஏதாவது ஒரு சிறிய பொருளையாவது நெய்வேத்தியமாக வைத்து இறைவனை வழிபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். நாம் வைக்கக்கூடிய பொருட்களை பொறுத்து நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இறைவனுக்கு எந்த பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் நல்லது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டிய பிரசாதம்
ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் அனைத்து தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது தனியாக ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் ஏற்றுவதால் நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். தீபம் ஏற்றி வைத்துவிட்டு பாசிப்பருப்பு பாயாசத்தை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய முடியவில்லை என்றால் மாலை 6:00 மணிக்கு கூட செய்யலாம். பாசிப்பருப்பு பாயாசத்தை வைத்து வழிபாடு செய்யும் போது பிரிவிலேயே சுபகாரிய தடைகள் அனைத்தும் விலகி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு!!




