- Advertisement -
திருநெல்வேலி என்றாலே நிறைய ஸ்பெஷலானா உணவுகள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த இட்லி பொடி அட்டகாசமான சுவையில் காரசாரமாக இருக்கும். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இனி சாம்பார், சட்னி தேவை இல்லை, இந்த இட்லி பொடி இருந்தால் போதும்
இதையும் படியுங்கள் : பஞ்சு போன்று மென்மையாக ரவா இட்லி இனி இப்படி செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையில் இருக்கும்!
- Advertisement -
எவ்வளவு இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவார்கள். இந்த இட்லி பொடி சுலபமாக செய்து விடலாம். இந்த இட்லி பொடி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
திருநெல்வேலி இட்லி பொடி | Idli Podi Recipe In Tamil
திருநெல்வேலி என்றாலே நிறைய ஸ்பெஷலானா உணவுகள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த இட்லி பொடி அட்டகாசமான சுவையில் காரசாரமாக இருக்கும். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இனி சாம்பார், சட்னி தேவை இல்லை, இந்த இட்லி பொடி இருந்தால் போதும் எவ்வளவு இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவார்கள். இந்த இட்லி பொடி சுலபமாக செய்து விடலாம். இந்த இட்லி பொடி
Yield: 4 people
Calories: 110kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- ½ கப் உடைத்த உளுத்தம் பருப்பு தோல் உள்ளது அல்லது இல்லாதது
- 1 சொட்டு எண்ணெய்
- 6 பல் பூண்டு தட்டியது
- 9 வர மிளகாய்
- ½ டேபிள் ஸ்பூன் கல்லு உப்பு
- ¼ கப் எள்ளு
- பெருங்காய கட்டி புரிந்தது சிறிய துண்டு 2
செய்முறை
- முதலில் ஒரு பான் அடுப்பில் வைத்து அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அதனை தனியாக ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்.
- பிறகு அதே பானில் எண்ணெய் விட்டு தட்டிய பூண்டு சேர்த்து சிவக்க வறுத்து அதையும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து அதே பானில் வர மிளகாய், மற்றும் கல்லு கல்லுப்பு சேர்த்து சிவக்க வறுத்து வறுத்த உளுத்தம் பருப்புடன் இதையும் சேர்த்து ஆறவிடவும்.
- பிறகு அதே பானில் எள்ளு சேர்த்து கருகாமல் வறுத்து உளுந்து, வரமிளகாயுடன் சேர்த்து ஆறவிடவும்.
- அடுத்து ஒரு மிகச்சில பூண்டை தவிர வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து அத்துடன் பெருங்காய கட்டி சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். பிறகு பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அரைத்ததை நன்கு ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். ஒரு மாதம் வரை பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
- இப்பொழுது காரசாரமான இட்லி பொடி தயார்.
Nutrition
Serving: 400G | Calories: 110kcal | Carbohydrates: 45g | Protein: 13g | Saturated Fat: 0.5g | Potassium: 301mg | Sugar: 0.5g