- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். பூரி என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். அதிலும் கூடவே உருளைக்கிழங்கு மசாலா என்றால் டபுள் ஹேப்பி. பெரும்பாலான குழந்தைகள் ஹோட்டல் மெனு கார்டை பார்த்ததும் விரும்பி அதிகம் ஆர்டர் செய்யும் உணவாக பூரி மசாலா கிழங்கு உள்ளது.
குழந்தைகள் மட்டுமில்லை இந்த லிஸ்டில் பெரியவர்களும் உண்டு. சில பேருடைய வீடுகளில் பூரி சுட்டால் எவ்வளவு இருந்தாலும் பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு பூரியை விரும்புபவர்களாக இருப்பார்கள். பூரி சுடுவது சப்பாத்தி சுடுவதை விட மிக மிக எளிமையானது. பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும்.
பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம். ஆம் இன்று பூரியை புதுவிதமான முறையில் தூதுவளை சேர்த்து தான் செய்ய போகிறோம். தூதுவளை இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் நிறைந்தது. இதனை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தூதுவளை வைத்து எப்படி பூரி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு பாலக் பூரி இப்படி செய்து பாருங்க! இதை விட ஒரு ஹெல்தியான பூரி இருக்கவே முடியாது!
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தூதுவளையை நன்கு தண்ணீரில் அலசி விட்டு சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பின் இதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் கோதுமை மாவுடன் நாம் அரைத்து வைத்துள்ள தூதுவளை விழுது மற்றும் பொடியாக நறுக்கின கொத்தமல்லி, சிறிதளவு எண்ணெய் விட்டு பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
நாம் பிசைந்த மாவை 5 நிமிடங்கள் ஒரு துணி வைத்து மூடி வைத்து விடவும். பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தூதுவளை பூரி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை, வேணுமென்றால் உருளை மசாலாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.






