- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
சமையலில் முக்கிய பொருளாக கருதப்படும் தக்காளி அவற்றின் நிறங்கள் மற்றும் சுவைகள் காரணமாக அனைவராலும் விரும்பப்படுகிறது. பிரியாணி முதல் சட்னி வரை தக்காளி பங்கு முக்கியமானது. இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யலாம் என்று நினைத்துள்ளீர்களா? அதற்கு ஒரு புளிப்பான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் தக்காளி கொத்சு செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபம் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சமையலுக்கு தக்காளி மிகவும் முக்கியமான ஒரு பொருள். அந்த தக்காளியில் நிறைய ரெசிபிகள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் தக்காளி தொத்சு சாப்பிடாதவர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். சமைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி கொஞ்சம் புதியதாக இருக்கும். இந்த தக்காளி கொத்சு இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி இவை அனைத்திற்கும் சைடிஷாக சாப்பிடலாம்.
இந்த தக்காளி கொத்சும் அப்பளமும் இருந்தால் போதும். அதுவே பலருக்கும் விருந்து சாப்பிட்டது போல் குஷி ஆகிவிடுவார்கள். தக்காளியில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளது. தக்காளியில் லைகோபீன் போன்ற அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இருதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து அதிகப்படியான இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள தக்காளியில் எப்படி கொத்சு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!
Ingredients
Method
முதலில் தக்காளியை நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்சி ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், வர மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
இது நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான தக்காளி கொத்சு தயார். இது இட்லி, உப்புமா, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






