- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner, LUNCH
தக்காளி கடையல் தக்காளி தொக்கு தக்காளி சட்னி அப்படின்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையில இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா இப்ப நம்ம செய்ய போற இந்த மாதிரி ஒரு செய்முறை தக்காளி கடையில் மட்டும் செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு காலியாகும் இரண்டு இட்லி சாப்பிடுற இடத்துல நாலு இட்லி சாப்பிடலாம் சப்பாத்தி எக்கச்சக்கமா சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். அவ்ளோ ருசியா இருக்கும். தயிர் சாதத்துக்கு இந்த தக்காளி கடையில் சைட் டிஷ்ஷா கூட வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் அவ்வளவு ருசியா இருக்கும்.
நம்ம இந்த தக்காளி கடையல் செய்வதற்கு ரொம்ப எல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை. ரொம்பவே ஈசியா இந்த தக்காளி கடையல் செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்க கூடிய பொருட்களை வைத்து சூப்பரான முறையில் இந்த தக்காளி கடையல் செய்யலாம். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த தக்காளி கடையில் செய்து கூடவே கொஞ்சமா அப்பளம் வைத்து கொடுக்கலாம் கண்டிப்பா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க சப்பாத்தி தோசை இட்லி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடக்கூடிய ஒரு அட்டகாசமான சிம்பிளான தக்காளி கடையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இன்ஸ்டன்ட் ரவா தக்காளி தோசை, மாவு இல்லாத சமயத்துல செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு,சோம்பு, சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு மஞ்சள் தூள் மல்லி தூள் மிளகாய் தூள் அனைத்தும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்களுக்கு நன்றாக வேக வைக்கவும்.
நன்றாக வெந்த பிறகு மத்து வைத்து நன்றாக கடைந்து எடுத்தால் சுவையான தக்காளி கடையல் தயார்.






