பொதுவா எல்லார் வீட்டிலயும் இட்லி தோசை மாவு கண்டிப்பா இருக்கும். வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி இட்லி மாவு கண்டிப்பா அரைச்சு வச்சுப்பாங்க அது இல்லன்னா நமக்கு பொழுதே போகாது என்ன செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும். என்னதான் சப்பாத்தி பூரி பொங்கல்னு செஞ்சாலும் வீட்ல இட்லி தோசை மாவு இருந்தா நமக்கு பெரிய உதவியா இருக்கும். ஆனா ஒரு சில சமயங்கள்ல நம்ம வீட்ல மாவு இல்லனா கவலையே படாதீங்க ரவையும் தக்காளியும் இருந்தா போதும் சூப்பரான இன்ஸ்டன்டான ஒரு தோசை செஞ்சு சாப்பிடலாம்.
இதுக்கு மாவு புளிக்க வைக்கனும் அப்படின்ற அவசியமே கிடையாது. அப்படியா அரைச்சு தோசையா ஊத்திக்கலாம். வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க எல்லாருக்குமே கொடுக்கலாம். இந்த தோசை ஓட டேஸ்டும் சூப்பரா இருக்கும் தக்காளி சட்னி தேங்காய் சட்னி இட்லி பொடி அப்படின்னு எது கூட வேணும்னாலும் வெச்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான இன்ஸ்டன்ட் ரவா தக்காளி தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ரவா தக்காளி தோசை | Rava Tomato Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 1 தக்காளி
- 10 சின்ன வெங்காயம்
- 3 டேபிள் ஸ்பூன் தயிர்
- 2 வர மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் ரவை சிறிதளவு தண்ணீர் ஒரு தக்காளி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- அரைத்த மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- இப்பொழுது ஒரு தோசை கல் வைத்து அதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் தோசை ஊற்றி எடுத்தால் சுவையான இன்ஸ்டன்ட் ரவா தக்காளி தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : குழந்தைகளோட ஆரோக்கியத்துக்கு இனிமேல் பச்சை பயறு தோசை செஞ்சு கொடுங்க!!