- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner
இன்று நாம் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு ஊற்றி சாப்பிடும் வகையில் முக்கியமாக பரோட்டாவிற்கு ஊற்றி சாப்பிடும் வகையில் தக்காளி கார சால்னா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த தக்காளி கார சால்னா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் அடுத்த
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் தக்காளி மிளகு ரசம் செய்வது எப்படி ?
முறையும் இதை வைக்க சொல்லி உங்களிடம் கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த தக்காளி கார சால்னா அற்புதமான சுவையில் இருக்கும். நீங்கள் எப்பொழுதும் போல் இட்லி தோசைக்கு சாம்பார் வைப்பதுக்கு பதில் இந்த தக்காளி கார சால்னா செய்து பார்க்கலாம். அதனால் இன்று இந்த தக்காளி கார சால்னா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் தனியா, ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கசகசா, போன்ற பொருட்களை சேர்த்து வறுத்து தனியாக குளிர வைக்கவும்
பின் தீயை மிதமாக ஏறிய விட்டு வறுக்கவும் பின் மனம் வர தொடங்கியதும் இதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஐந்து பல் பூண்டு, இரண்டு ஏலக்காய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு கடாயை அதே கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின் இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் முன்று டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். பின் தேங்காய் நன்கு வதங்கி வந்ததும் கடாயை இறக்கி குளிர வைத்து கொள்ளுங்கள்.
பின் அனைத்து பொருட்களும் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து
அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் கடுகு சேர்த்து பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
பின் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி பின் நாம் அரைத்த மசாலா விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் சால்னா நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் நாம் வைத்திற்கும் சிறிது கொத்தமல்லியை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி கார சால்னா தயார்.






