Advertisement
சைவம்

சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?

Advertisement

நாம் பொதுவாக சிக்கன், மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது எதற்கு தெரியுமா ? சிக்கன் மட்டன் போன்ற உணவு பொருட்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்காக சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும்.

இதையும் படியுங்கள் : காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் இன்று இந்த தக்காளி ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இந்த தக்காளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தக்காளி ரசம் | Tomato Rasam Recipe in Tamil

Print Recipe
சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இந்த ரசத்தை வழக்கம் போல் செய்யாமல் புதியதாக ஒரு ரசம் ஒன்று செய்து பார்க்கலாம். ஆகையால் இன்று இந்த தக்காளி ரசத்தை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் உணவோடு மட்டும் சாப்பிடாமல் தனியாக சூப் போல குடிக்கவும் செய்வார்கள் அந்த அளவுக்கு மிகவும் ருசியான முறையில் அட்டகாசமாக இருக்கும். ஆகையால் இந்த தக்காளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Rasam
Cuisine Indian, TAMIL
Keyword Tomato Rasam, தக்காளி ரசம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Advertisement
Servings 5 People
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்

Ingredients

மிக்ஸியில் அரைக்க

  • பெருங்காயம் சிறிய கட்டி
  • 3 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 tbsp மிளகு
  • 2 tbsp சீரகம்
  • 4 தக்காளி நறுக்கியது
  • 2 ½ கிளாஸ் தண்ணீர்

ரசம் வைக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 3 tbsp உப்பு
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 1 கொத்து கொத்த மல்லி

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சிறிய அளவு துண்டு பெருங்காய கட்டி, மூன்று வர மிளகாய், 6 பல் பூண்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, 2 டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கொரகொரவென நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு நான்கு தக்காளி பழங்களை
    Advertisement
    சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதையும் மிக்ஸி ஜாரில் ஏற்கெனவே அரைத்த பொருட்களுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளியை சேர்த்து கொள்ளவும்.
  • இதனுடன் அரைத்த தக்காளியுடன் இரண்டரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனோடு ஒரு டீஸ்பூன் அளவு கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடுகு நன்கு பொரித்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் இரண்டு வர மிளகாய்களை பாதியாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும் பின்பு ஒரு பத்து வினாடிகள் இதை தாளித்து பின் நம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி கரைசலை இதனுடன் சேர்த்து ஊற்றிக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் 3 டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின்பு ரசம் நன்றாக கொதித்து நூரைத்து வரும் பொழுது அடுப்பை அணைத்து ஒரு கைப்பிடி கொத்தமல்லியை தூவி விடுங்கள் சுவையான தக்காளி ரசம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 5people | Calories: 60kcal | Protein: 9.78g | Saturated Fat: 1.1g | Cholesterol: 16mg | Sodium: 18mg | Potassium: 180mg | Fiber: 2.4g | Sugar: 3.1g

English Overview: tomato rasam is one of the most important dishes in india. tomato rasam recipe or tomato rasam seivathu eppadi or tomato rasam in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

7 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

9 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

11 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

16 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

18 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

20 மணி நேரங்கள் ago