காலை நேரத்தில் உடனடியாக செய்யும் தக்காளி தொக்கு சாதம் ?

- Advertisement -

20 நிமிடங்கள் குறைவான தமிழ்நாட்டு பானியில் எளிமையான முறையில் செய்யும் தக்காளி தொக்கு சாதம். இந்த சாதம் மிதமான காரசாரமாகவும் மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களது காலை நேரங்களில் சில சமயம் பிஸியாக இருக்கும் அப்பொழுது காலை உணவையை சிலர் ஒதுக்கிவிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?

- Advertisement -

இப்படியான சூழ்நிலைகள் வரும் அது போன்ற நேரங்களில் மதிய உணவாகவும் செய்து ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்லும் பெரியவர்களுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். இந்த தக்காளி சத்தத்துடன் தயிர் அல்லது ரைத்தாவுடன் பரிமாறலாம், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த சாதம் இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்யலாம், தேவைப்படும் பொருட்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். அட்டகாசமாக இருக்கும்.

Print
No ratings yet

தக்காளி தொக்கு சாதம் | Thakkali Thokku Rise Recipe In Tamil

20 நிமிடங்கள் குறைவான தமிழ்நாட்டு பானியில் எளிமையான முறையில் தக்காளி தொக்கு சாதம். இந்த சாதம் காரசாரமாக அட்டகாசமான சுவையில் இருக்கும். பிஸியான காலை நேரங்களிலும் மதிய உணவாகவும் செய்து ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்லும் பெரியவர்களுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம்.இந்த தக்காளி சத்தத்துடன் தயிர் அல்லது ரைத்தாவுடன் பரிமாறலாம், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த சாதம் இருக்கும்.
Prep Time10 mins
Active Time10 mins
Total Time20 mins
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: thakali thoku sadham, தக்காளி தொக்கு சாதம்
Calories: 122kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வடித்த சாதம்
  • 2 தக்காளி பெரியது (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • 10 சின்ன வெங்காயம் நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • பெருங்காயத்தூள் சிறிதளவு
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும், பின்னர் பெருங்காயத்தூள் சேர்க்கவும். வெங்காயம நன்றாக வதங்கி பொன்னிறமாக வந்தவுடன்.
  • பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து, சிறிது உப்பிட்டு சேர்த்து கிளரி விட்டு வதக்கி கொள்ளவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து வதக்கவும், பிறகு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  • இதில் ஒரு கப் சாதம் சேர்த்து, நன்றாக கிளறி, சூடாக பறிமாறவும் அவ்வளவு தான் தக்காளி தொக்கு சாதம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 122kcal | Protein: 16g | Fat: 6.6g | Saturated Fat: 1.2g | Cholesterol: 3.8mg | Sodium: 9.5mg | Potassium: 287mg | Fiber: 4.79g | Sugar: 2.5g

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here