கடவுள்களில் பல கடவுள்கள் திருமணமாகாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஆஞ்சநேயர் நித்திய பிரம்மச்சாரி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில புராணங்களில் ஆஞ்சநேயருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறது. ராமாயணத்தில் வரக்கூடிய ஒரு முக்கிய கதாபாத்திரமான ஆஞ்சநேயருக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்ற குழப்பம் பலருக்கு உள்ளது அந்த வகையில் அந்த குழப்பத்திற்கான விடை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடக்கூடிய ஆஞ்சநேயர் மிகவும் சக்தி பெற்றவர். ராமாயணத்தில் ராமனுக்கே பல உதவிகளை செய்தவர். இந்து கடவுள்களில் தனித்துவமான கடவுளான ஆஞ்சநேயர் சிரஞ்சீவி வரம் பெற்று இருப்பதால் இன்னும் பூமியில் இவர் வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே ஆஞ்சநேயரை நினைத்து மனதார வழிபட்டு வந்தால் நம்முடைய சோகங்கள் கஷ்டங்கள் பிரச்சனைகள் என அனைத்துமே தீர்ந்து போகும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

அனுமனை வழிபடுவதற்கு பெண்களுக்கான கட்டுப்பாடு
ஆஞ்சநேயரை ஆண் பெண் என இருவருமே மனதார நினைத்து வழிபடலாம் அவர்களுக்கு கண்டிப்பாக அதனுடைய பலன் கிடைக்கும். ஆண்கள் ஆஞ்சநேயரை நினைத்து மனதார தியானம் இருந்து விரதம் இருந்து மந்திர ஜெபம் செய்த ஸ்ரீராம மந்திரத்தை உச்சரித்தாலே ஆஞ்சநேயர் ஓடோடி வந்து உதவுவார் என்று சொல்லப்படும். ஆனால் பெண்கள் மட்டும் ஆஞ்சநேயரை மனதார வழிபட்டு விட்டு பிரார்த்தனையை முடித்துக் கொள்ள வேண்டும் ஆஞ்சநேயரின் சிலையை தொட்டு வணங்க கூடாது. இதுதான் பெண்களுக்கு ஆஞ்சநேயரை வழிபடுவதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கட்டுப்பாடு. இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமே உள்ளது என்று சொல்லப்படுகிறது.
பெண்கள் ஆஞ்சநேயரை தொட்டு வணங்க கூடாது என்பதற்கான காரணங்கள்
ஆஞ்சநேயர் பெண்கள் அனைவரையும் தாயாக மதித்து போற்றினார். எனவே தாயாக மதித்த பெண்கள் யாரும் தன்னுடைய காலை தொட்டு வணங்க கூடாது என்பதில் ஆஞ்சநேயர் உறுதியாக இருந்தார். எனவே அனுமனை பெண்கள் கையெடுத்து வணங்கி சிரம் தாழ்த்தி வழிபடலாமே தவிர அவரின் கால்களை தொட்டு பெண்கள் வணங்க கூடாது. அப்படி வணங்கினால் அது பெரிய பாவமாக கருதப்படுகிறது. எனது ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி விரதம் இருந்து பிரசாதம் நெய்வேதியமாக படைத்து அவரை பெண்கள் வழிபட்டு வரலாம்.

ஆஞ்சநேயரின் திருமணம் பற்றிய சில உண்மைகள்
ஆஞ்சநேயர் சிரஞ்சீவியின் வரம் பெற்று நித்திய பிரம்மச்சாரி ஆக வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சில புராணங்களில் ஆஞ்சநேயருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது. உண்மைதான் ஆஞ்சநேயருக்கு திருமணம் ஆகிவிட்டது ஆனால் அது இனிமையான இல்லற வாழ்க்கைக்காக கிடையாது. அந்த திருமணம் ஒரு உயர்ந்த காரணத்திற்காக மட்டுமே என்று புராணங்கள் சொல்கிறது.
புராண கதையின்படி ஆஞ்சநேயரின் குரு சூரிய பகவான். சூரிய பகவான் ஆஞ்சநேயருக்கு சூரிய பகவான் சில கலைகளையும் ஞானங்களையும் கற்றுக் கொடுத்தார். ஆனால் 9 விதமான வித்தியாசங்கள் எனப்படும் ஞானங்களில் ஐந்து ஞானங்களை மட்டுமே சூரிய பகவான் ஆஞ்சநேயருக்கு கற்றுக் மீதமுள்ள நான்கு ஞானங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்று சூரிய பகவான் சொன்னார். எனவே மீதி இருக்கும் அந்த நான்கு ஞானங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஆஞ்சநேயர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சூரிய பகவான் சொன்னார்.
ஆஞ்சநேயரின் மனைவி
அந்த நேரத்தில் ஆஞ்சநேயர் ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். இருப்பினும் குருவின் பேச்சுக்கு கீழ்ப்படிந்து திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்வார். ஆனால் யாரை திருமணம் செய்து கொள்வது என்ற யோசனையில் இருந்த அனுமனுக்கு சூரிய பகவான் தன் மகளான சுவர்சலாவையே திருமணம் செய்து வைத்துவிடுவார். திருமணம் முடிந்த கையோடு சுவர்சலா கடுமையான தவத்தில் மூழ்கி விடுவாள் காரணம் அவள் ஒரு மிகப்பெரிய துறவி. இப்பொழுது ஆஞ்சநேயர் மீதமுள்ள நான்கு ஞானங்களையும் கற்றுக் கொள்வார். ஆனால் அவருடைய பிரம்மச்சார விரதம் மட்டும் கலையவே கலையாது. என்னதான் ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி ஆக இருந்தாலும் புராணங்களின்படி அவருக்கு மகர்த்வாஜா என்ற மகன் உள்ளதாக கூறப்படுகிறது.




