Advertisement
சைவம்

உடுப்பி ஸ்டைல் ருசியான பிஸிபேளாபாத் ரெசிபியை அவசியம் மிஸ் பண்ணாம இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத் உணவு கர்நாடக மாநிலத்தில் இது மிகவும் பிரசித்தம். கர்நாடக மாநிலம் உடுப்பியின் ஸ்பெஷல் இந்த பிஸிபேளாபாத் ஆகும். பிசிபேளாபாத் தென்னிந்தியாவின் ஒரு வகையான சாம்பார் சாதம். இவை பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு உணவு. பிசிபேளேபாத்தை பெரும்பாலும் அப்பளம், உருளைக்கிழங்கு சிப்ஸ், அல்லது உருளைக்கிழங்கு பொரியலோடு பரிமாறுவது தான் வழக்கம். ஏனெனில் குழைந்து இருக்கும் சுவையான சாதத்திற்கு இவை மேலும் சுவையூட்டும். பிஸிபேளா பாத்திற்கும் சாம்பார் சாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக பிஸிபேளாபாத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு எக்காரணம் கொண்டும் சேர்க்கப்படாது.

பிஸி என்றால் சூடு, பேளா என்றால் பருப்பு, பாத் என்றால் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து செய்யக்கூடிய சாதமாகும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உடலுக்கு சத்தாக இருக்கும் வகையில், காலையில் விரைவில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், புரோட்டீன் அதிகம் இருக்கக்கூடிய பருப்பை வைத்து இந்த சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த பிசிபேளா பாத்தை காலை வேளையில் செய்வது என்பது மிகவும் ஈஸி. குழம்பு, சாதம் என்று தனியாக செய்வதைவிட இவ்வாறு செய்யும்பொழுது நேரமும் குறைவாக இருக்கும், இதன் சுவையும் அதிகமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Advertisement

உடுப்பி பிஸிபேளாபாத் | Udupi Bisibelabath Recipe In Tamil

Print Recipe
பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத் உணவு கர்நாடக மாநிலத்தில் இது மிகவும் பிரசித்தம். கர்நாடக மாநிலம் உடுப்பியின் ஸ்பெஷல் இந்த பிஸிபேளாபாத் ஆகும். பிசிபேளாபாத் தென்னிந்தியாவின் ஒரு வகையான சாம்பார் சாதம். இவை பெரும்பாலும் கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு உணவு. பிசிபேளேபாத்தை பெரும்பாலும் அப்பளம், உருளைக்கிழங்கு சிப்ஸ், அல்லது உருளைக்கிழங்கு பொரியலோடு பரிமாறுவது தான் வழக்கம். ஏனெனில் குழைந்து இருக்கும் சுவையான சாதத்திற்கு இவை மேலும் சுவையூட்டும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Udupi Bisibelabath
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 386

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப்  கலந்த காய்கறிகள்
  • 1/4 கப் புளி கரைசல்
  • 1 கப் புழுங்கல் அரிசி
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 துண்டு வெல்லம்

அரைக்க :

  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 10 வர ‌மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 துண்டு பட்டை

தாளிக்க :

  • 1 டீஸ்பூன் கடுகு                            
  • 3 வர ‌மிளகாய்
    Advertisement
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

Instructions

  • முதலில் காய்கறிகளை தண்ணீரில் சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் கடலை பருப்பு, சீரகம், வெந்தயம், மிளகாய், மிளகு, தனியா, தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறினதும் இதனை‌ ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அரிசி மற்றும் பருப்பை நன்கு அலசி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, மிளகாய், வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உருளை, கேரட், குடமிளகாய், தக்காளி, கோஸ் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து காய்கறிகள் வெந்ததும் புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து ஒன்று சேர வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழை மற்றும் நெய் விட்டு கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் வித்தியாசமான, சுவையான, உடுப்பி ஸ்டைல் பிஸிபேளாபாத் தயார். இதற்கு சேர்த்து சாப்பிட பொரித்த அப்பளம், சிப்ஸ் சரியாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 386kcal | Carbohydrates: 6.4g | Protein: 21g | Fat: 7.4g | Saturated Fat: 1.22g | Sodium: 50mg | Potassium: 93mg | Fiber: 7.2g | Vitamin A: 23IU | Vitamin C: 35mg | Calcium: 8mg | Iron: 20mg

இதனையும் படியுங்கள் : உடுப்பி கருணைகிழங்கு வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! பார்ததாலே நாவில் எச்சி ஊறும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago