- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. காய்கறி சாம்பார், கதம்ப சாம்பார், கிள்ளி போட்ட சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், இடிச்ச சாம்பார், டிபன் சாம்பாரென எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் தென்னிந்திய சமையலில் இடம் பிடித்துள்ளன.
ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் செய்தால் அலுத்து விடும் அல்லவா? அதனால் சற்று வித்தியாசமா உடுப்பி ஸ்டைலில் வெள்ளரிக்காய் சாம்பார் செய்து பாருங்கள். வெள்ளரிக்காய் நிச்சயம் கோடை காலத்தில் ஒரு சூப்பர் உணவாகவே கருதப்படுகிறது. அதை வைத்து ஏன் வீட்டில் சாம்பார் செய்யக்கூடாது. எந்த காய்கறிகளை வைத்து சாம்பார் செய்தாலும் அதை சுவை அட்டகாசமாகவே இருக்கும்.
முள்ளங்கி போட்டால் அது ஒரு சுவையை தரும். பூசணிக்காயை போட்டால் அது ஒரு தனி சுவையை தரும். அப்படி தான் வெண்டைக்காய், கத்திரிக்காய் சாம்பார் என ஒவ்வொன்றிக்கும் தனித்துவம் உண்டு. அந்த வகையில் வெள்ளரிக்காய் சாம்பாரும் நிச்சயமாக சூப்பராக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் வெள்ளரிக்காயை சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு வெள்ளரிக்காய் கொண்டு சாம்பார் செய்து கொடுங்கள்.
இந்த வெள்ளரிக்காய் சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். இதுவரை நீங்கள் வெள்ளரிக்காய் கொண்டு சாம்பார் செய்ததில்லை என்றால், அடுத்தமுறை சாம்பார் வைக்கும் போது இந்த வெள்ளரிக்காய் சாம்பாரை செய்யுங்கள். இப்போது சுவையான உடுப்பி ஸ்டைலில் வெள்ளரிக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் உடுப்பி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!
Ingredients
Method
முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து, மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் புளி தண்ணீர், வேகவைத்த பருப்பு, நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் வெல்லம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அதன்பிறகு ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் தயார்.






