இன்று நாம் மதிய உணவுக்கு ஏற்ற வாழைபூ குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் மதியம் சுட சுட சாதத்துடன் இந்த வாழைப்பூ குழம்பு ஊற்றி சாப்பிட்லால் அதன் சுவை அற்புதமாக இருக்கும். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் நிறைவாக சாப்பிட்டு முடிக்கலாம். இது போன்ற நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில்
இதையும் படியுங்கள் : சுடான சாதத்துடன் சாப்பிட கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ?
உள்ளவர்களுக்கு. இந்த வாழைப்பூ குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த வாழைப்பூ குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையில் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
வாழைப்பூ குழம்பு | Valaipoo Kulambu Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 முழு வாழைப்பூ
- 2 tbsp எண்ணெய்
- 8 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
- 1 கப் தேங்காய் பால்
- 1 tsp சீரகம்
- 1 கொத்து கருவேப்பிலை
- ¼ tsp மஞ்சள் தூள்
- 1 tbsp மிளகாய்தூள்
- 1 tbsp தனியா தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு வாழைப்பூவில் உள்ள நரம்புகளை ஆய்ந்து சுத்தபடுத்தி எடுத்து கொள்ளவும்.பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் தண்ணீர் சூடானதும் அதில் நாம் ஆய்ந்த வாழைப்பூவை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் பின் பாதி எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து கொள்ளுங்கள்.
- பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் பூண்டு நன்கு வதக்கி வந்ததும்.
- நாம் தோல் உரித்து வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- பின் மசால பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். பின் புளி கரைசல் ஒரு கொதி வந்ததும் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய்பால் சேர்க்கவும்.
- அதன் பின் கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடங்கள் வேக வைத்து கொள்ளுங்கள். பின் குழம்பும் எண்ணெயும் தனியாக பிரிந்து வந்ததும் கடாயை இறக்கி வையுங்கள். அவ்வளவு தான் சுவையான வாழைப்பூ குழம்பு தயார்.