குடும்பத்தல் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்றால் குடும்பத்தில் நிம்மதி இருக்க வேண்டும். சண்டையும் சச்சரவும் எப்பொழுதும் குடும்பத்தில் இருந்து கொண்டே இருந்தால் வீட்டில் எந்த ஒரு மகிழ்ச்சியும் இருக்காது. மேலும் நிம்மதியோடு சேர்த்து பண பிரச்சினைகளும் ஏற்படும் நிம்மதி இல்லாத சூழலில் வாழ்வதே பெரிய சிரமமாகிவிடும். பண பிரச்சனையை தீர்ப்பதற்கும் வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகளை நீக்குவதற்கும் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.

தெய்வத்தின் அருள்
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும் அந்த பிரச்சனைகள் நீங்க வேண்டும். என்றால் அதற்கு நாம் விட்டுக் கொடுத்து போவதோடு தெய்வத்திடையே அருளும் தேவைப்படும். குறிப்பாக பெண் தெய்வ வழிபாடு பல மடங்கு பலன்களை கொடுக்கக் கூடியது. பெண் தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த நாள் என்றால் அது வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
துர்க்கை அம்மன் வழிபாடு
வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. அதனால் தான் வெள்ளிக்கிழமை என்று பலரும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வருகிறார்கள். ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனை வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலிலோ சென்று வழிபாடு செய்யலாம். வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுடைய ஆலயத்திற்கு குங்குமத்தை தானமாக வாங்கி கொடுக்கலாம். குங்குமத்தை வாங்கி கொடுத்துவிட்டு அதனை அபிஷேகத்திற்காக வாங்கி கொடுத்துள்ளோம் என்று அர்ச்சகர் இடம் கூற வேண்டும். குங்குமத்தை அபிஷேகம் செய்வதை நாம் பார்த்தாலே நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
நிம்மதி கிடைக்க துர்க்கை அம்மன் வழிபாடு
தொடர்ச்சியாக வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மன் கோவிலுக்கு குங்குமத்தை அபிஷேகத்திற்காக வாங்கி கொடுப்பது மிகவும் சிறந்தது. இதன் மூலம் நம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் நிம்மதி கிடைக்கும். எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் பரிபூரணமாக அதனை நாம் முழு மனதோடு செய்ய வேண்டும் அப்பொழுது தான் அந்த பரிகாரத்திற்கு உண்டான பலன் கிடைக்கும். அந்த வகையில் முழு மனதோடு அம்மனை வழிபாடு செய்வதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
இதனையும் படியுங்கள் : எம பயம் போக்கும் காலபைரவர் வழிபாடு




