- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை வரகு அரிசியில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாமை , திணை, குதிரைவாலி போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல சாம்பார் சாதம் செய்தால் ருசியாக இருக்கும்.
இவ்வளவு சுலபமாக சாம்பார் சாதம் யாராலும் செய்யவே முடியாது. வெறும் 15 நிமிடத்தில் அருமையான வரகு சாம்பார் சாதம் ஆரோக்கியமாக செய்து விடலாம். நிறைய பேர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி என்றால் அந்த வரிசையில் இந்த சாம்பார் சாதத்திற்கு முதலிடம் உண்டு. சாம்பார் இல்லாத பந்தியே இல்லை என்று சொல்லலாம். சைவ விருந்தில் முதல், முக்கிய பங்கு வகிக்க கூடிய இந்த சாம்பார் சாதத்தை மிக மிக சுலபமாக வரகு அரிசி வைத்து எப்படி செய்வது என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Ingredients
Method
முதலில் வாணலியில் சாம்பார் சாதம் மசாலா பொடி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும், ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைது, அந்தப் பொடியை தனியே வைக்கவும்.
வரகரிசியையும்,துவரம் பருப்பையும் தனித்தனியே 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.கொத்தமல்லி தழை. காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் சிறிய (சாம்பார்) வெங்காயம், முழு பச்சை மிளகாய், கறிவேப்பிலை வதக்கவும். போட்டு அடுத்து தக்காளியுடன், மஞ்சள் பொடி, பெருங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது அனைத்து காய்கறிகள், வரகரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து நீரை ஊற்றி வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து பின் அடுப்பை அணைக்கவும்.
குக்கர் ஆவி போன பிறகு, மூடியைத் திறந்து சாம்பார் சாத மசாலா பொடியை சேர்த்துக் கலக்கவும்.
குக்கரைமீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான வரகு சாம்பார் சாதம் தயார்.






