- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பீர்க்கங்காய் பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க பீர்க்கங்காய் கூட்டு கூட செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வறுத்து அரைச்ச மசாலாவை வச்சு ஒரு சூப்பரான பீர்க்கங்காய் கூட்டு செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த மாதிரி ஒரு பீர்க்கங்காய் கூட்டை நீங்க வாழ்க்கையில சாப்பிட்டு இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்த கூட்டு செம டேஸ்டா இருக்கும் இந்த சூப்பரான பீர்க்கங்காய் கூட்டுக்கு எல்லாரும் பேனாகிடுவாங்க. சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும்.
சப்பாத்தி பூரி இட்லி தோசைக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். எப்பவும் ஒரே மாதிரியா சட்னி சாம்பார் குருமானு வைக்காம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான கூட்டு வச்சு சாப்பிட்டு பாருங்க. பீர்க்கங்காய் சாப்பிடுவதால் உடம்பில் நிறைய ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ரத்தம் கம்மியா இருக்கிறவங்க கண்டிப்பா வாரத்தில் ஒரு தடவ பீர்க்கங்காய் சேர்த்துக்கலாம். அப்படி நீங்க பீர்க்கங்காய் சேர்க்கும் போது அதை எப்படி செஞ்சு சாப்பிடுவது என்று தெரியவில்லை என்றால் இந்த மாதிரி ஒரு தடவை வறுத்து மசாலா அரைச்சு அதை வச்சு செஞ்சு பாருங்க.
கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். இந்த சுவையான பீர்க்கங்காய் கூட்டு ரெசிபிக்கு எல்லாரும் அடிமை ஆயிடுவாங்க. பீர்க்கங்காய் பருப்பு கூட்டு செய்து இருப்பீங்க ஆனா இந்த வித்தியாசமான கூட்டும் ஒரு தடவ செஞ்சு பாருங்க. இதுல நம்ம பட்டை கிராம்பு சேர்க்கறதால வாசனை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பழைய சாதத்துக்கும் கூட சைடு டிஷ்ஷா வெச்சு சாப்பிடுவதற்கு இந்த கூட்டு சூப்பரா இருக்கும். இந்த சுவையான சூப்பரான பீர்க்கங்காய் கூட்டு எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் தனியா விதைகள் சீரகம், பட்டை, கிராம்பு, தேங்காய் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கலந்ததும் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி அனைத்தும் வெந்ததும் இறக்கினால் சுவையான பீர்க்கங்காய் கூட்டு தயார்.






