ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷம் இருந்து கொண்டே இருக்கும். அது நம்முடைய ஜாதகத்தில் இருந்து வந்த தோஷமாக கூட இருக்கலாம் அதே போல் நாம் இருக்கக்கூடிய இடத்தை பொறுத்தும் நமக்கு தோஷம் ஏற்படும். அந்த தோஷத்தை வாஸ்து தோஷம் என்று அழைக்கிறோம். நாம் இருக்கக்கூடிய வீடு சொந்த வீடாக இருந்தாலும் வாடகை வீடாக இருந்தாலும் அந்த வீட்டினுடைய அமைப்பு சரியாக இருந்தால்தான் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றி அடையும். வாஸ்து ரீதியாக தோஷங்கள் இருந்தால் நம்மால் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய முடியாது அனைத்திலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும் அதை சரி செய்ய முயற்சிகள் பல எடுக்க வேண்டி இருக்கும். சொந்த வீட்டிற்கு நாமே வாஸ்து பார்த்து கட்டுவோம் ஆனால் வாடகை வீட்டிற்கு அந்த மாதிரி முடியாது அதனால் அந்த தோஷத்தை போக்குவதற்கு செய்யவேண்டிய தீப வழிபாட்டை பற்றி பார்க்க போகிறோம்.

வாஸ்து பகவான்
ஒவ்வொரு காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இருக்கும் பட்சத்தில் வாஸ்து பகவானும் இருக்கிறார் அவரை நினைத்து செய்யக்கூடிய ஒரு தீப வழிபாடு தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம் வாஸ்து பகவானை வழிபாடு செய்யும்போது ஆசிரியராக இருக்கக்கூடிய அனைத்து தோஷங்களும் நீங்கும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய வாஸ்து நாளில் வாஸ்து பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.பொதுவாக அன்றைய நாளில் சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பூமி பூஜை செய்ய நினைப்பவர்கள் பூமி சம்பந்தப்பட்ட பூஜையை செய்ய நினைப்பவர்கள் அனைவருமே தீபத்தை ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் தோஷங்களும் நீங்கும்.
வழிபாடு செய்ய வேண்டிய முறை
இந்த வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் ஜனவரி மாதம் வரக்கூடிய 25-ம் தேதி சனிக்கிழமை. அந்த நாளில் காலை 10:41 மணி முதல் 11 :17 மணி வரை வாஸ்து நேரம் உள்ளது இந்த நேரத்தில் வீட்டிலேயே கூட எளிமையாக தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டு வந்தால் நிச்சயமாக வாஸ்து பகவானுடைய அருளும் நமக்கு கிடைத்த தோஷங்கள் நீங்கி சொந்த வீடு கனவும் நினைவாகும்.
தீபம் ஏற்ற வேண்டிய முறை
வாஸ்து நிறத்தில் வீட்டு பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக சுத்தம் செய்து மஞ்சள் தடவி அதற்கு மேல் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு கோலத்தின் நான்கு திசைகளிலும் நான்காக விளக்குகளை வைத்து அகல் விளக்குகள் கோலத்தின் உட்புறமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அகல் விளக்கில் நினைவூட்டி பஞ்சத்தில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நான்கு விளக்குகளும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்க வேண்டும் இவ்வாறு தீபத்தை ஏற்று வைத்த பிறகு அன்றைய தினத்தில் நம்முடைய வீட்டில் என்ன இருக்கிறது அதை சிவபெருமானுக்கு நெய்வேதியமாக வைத்து ஓம் சிவாய நம ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும் சொந்த இடம் வாங்க வேண்டும் என்றால் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இறுதியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் வாஸ்து நேரம் முடியும் வரை தீபத்தை எரிய விட்டு பிறகு குளிர வைக்க வேண்டும். மனதார சிவபெருமானை நினைத்து இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நிச்சயமாக சொந்த வீடு கனவு நினைவாகும்.
இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க குலதெய்வ வழிபாடு




