வாடகை வீட்டில் இருப்பவர்கள் மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீர்!

- Advertisement -

பொதுவாக நாம் ஒரு வீடு கட்டும் போது வாஸ்துபடி தான் அந்த வீட்டை கட்டுவோம். வீடு மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள சமையலறை பூஜை அறை படுக்கையறை என ஒவ்வொரு அறையையும் பார்த்து பார்த்து வாஸ்து பிரகாரம் தான் கட்டுவோம் அப்பொழுதுதான் நம் மனதிற்கு நிறைவாக இருக்கும். அப்படி நாம் வாஸ்து பார்த்து வீடு கட்டவில்லை என்றால் நம் வீட்டில் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம் வாஸ்து தான் என்று நினைத்துக் கொள்வோம் ஆனால் அதுதான் சரியான ஒன்றும் கூட வீட்டில் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம் வாஸ்து தான் வாஸ்துபடி நாம் ஒரு விஷயத்தை செய்யவில்லை என்றால் அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை நாம் சமாளித்து தான் தீர வேண்டும் எனவே நாம் கட்டிய வீடாக இருந்தாலும் சரி வாடகை வீடாக இருந்தாலும் சரி அனைத்திலுமே வாஸ்து படி தான் நாம் குடியேற வேண்டும். அனைவருக்குமே மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தில் எந்த பிரச்சனையும் வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வாஸ்து பார்த்து நாம் வீட்டிற்கு குடியேற வேண்டும்.

-விளம்பரம்-

வீட்டில் கணபதி ஹோமம் செய்ய வேண்டிய இடம்

பொதுவாக அனைவருமே வீட்டில் குடியேறும்போது கணபதி ஹோமம் செய்யும் போது வீட்டின் மத்தியில் ஒரு இடத்தை தான் தேர்வு செய்வோம் ஆனால் நம் உடலோடு தொடர்புடைய வாஸ்துபடி வீட்டில் கணபதி ஹோமம் செய்யும்போது அக்னி மூலையை தான் தேர்வு செய்ய வேண்டும். அக்னி மூலையில் நாம் கணபதி ஹோமம் செய்யும் போது தான் அதற்கான முழு பலன்களையும் நாம் அடைய முடியும். மேலும் வீட்டின் வடமேற்கு மூலையிலும் கணபதி ஹோமம் செய்து யாகம் வளர்க்கலாம் அதைத் தவிர மற்ற இடங்களில் கணபதி ஹோமம் செய்வது அவ்வளவு நல்லது கிடையாது. நாம் வீடு கட்டுவதில் இருந்து வீடு குடியேறுவது வரையில் ஒவ்வொன்றையும் வாஸ்து பிரகாரம் செய்தால் மட்டுமே அந்த வீட்டில் நாம் நிம்மதியாக பிரச்சனைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும். சொந்த வீடு மட்டுமில்லாமல் வாடகை வீடாக இருந்தாலும் ஒத்திக்கு வீடாக இருந்தாலும் அங்கும் அக்னி மூலை மற்றும் வடமேற்கு மூலையில் தான் கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

- Advertisement -

மனிதனும் வாஸ்துவும்

பொதுவாக வாஸ்து என்பது மனிதனோடு தொடர்புடையதாக தான் இருக்கும். வாஸ்து படி நம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது என்றால் அந்த வீட்டில் உள்ள முக்கியமான நபர்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும். ஒருவருக்கு நேரமே சரியில்லாமல் இருந்தால் கூட வீட்டில் வாஸ்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் நேரம் நன்றாக இருந்தாலும் வீடு வாஸ்துபடி இல்லை என்றால் அவர்களை பிரச்சனைகள் சூழ்ந்துதான் கொள்ளும். இது வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து

வீட்டிற்கு மட்டும் தான் வாஸ்து பாதிக்குமா என்றால் கிடையாது நான் வேலை பார்க்கக்கூடிய இடம் நம் சொந்தமான இடமாக இருந்தாலும் சரி இல்லை வாடகை கட்டிடமாக இருந்தாலும் சரி அதிலும் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கும். வாஸ்து சரியாக அமைந்து விட்டாலே அந்த தொழிலில் வியாபாரம் சிறந்து விளங்கும் இல்லை என்றால் எவ்வளவு தான் நாம் முயற்சி செய்தாலும் தொழிலும் நிச்சயமாக பல பிரச்சனைகளை சந்திக்கும். எனவே தொழில் செய்யும் இடத்திலும் வாஸ்து பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை அலட்சியமாக எண்ணாமல் மிகவும் முக்கியமான ஒன்றாக நினைத்து செயல்படுத்தினால் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.