அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறை தான்.உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையலறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமையலறை உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தையும் பாதுகாக்கும் இடமாக இருக்கிறது. நம்முடைய வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் சமையல் அறை முக்கியமானது. நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். வீட்டின் சமையலறையில் அடுப்பை எந்த திசையில் வைத்தால் குடும்பத்தில் நன்மைகள் பெருகும், வீட்டில் 3 பர்னர் கேஸ் அடுப்புகளை பயன்படுத்தலாமா என்பது குறித்து வாஸ்து இந்த ஆன்மிகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சமையலறை
பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை. அதுவும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் குறைவாக புழங்க வேண்டும் அப்போதுதான் அந்த வீட்டில் சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். பழங்கால வீடுகளில் சமையலறை பெரியதாக இருக்கும். ஒருபக்கம் அமர்ந்து காய் வெட்டுவார்கள். ஒருபக்கம் சமையல் செய்வார்கள். இப்போது சமையல் அறை சுருங்கி விட்டது.
எந்த திசையில் சமயலறையை அமைக்கலாம்?
அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக சமையல் செய்வதற்கென்று தனியாக ஒரு அறை இருக்கும் அல்லது இடம் இருக்கும் அங்கு தான் சமையல் செய்வார்கள். பொதுவாக சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பதே சிறந்தது. நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும். அப்படி உங்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் சமையலறையை அமைக்க முடியாது என்றால், வடமேற்கு மூலை இரண்டாவது வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக கேஸ் அடுப்பின் நிலை குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் அமைதிக்கு முக்கியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி கேஸ் அடுப்பை சரியான திசையில் வைப்பது அவசியம்.
அடுப்பை எந்த திசையில் வைத்தால் நல்லது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள அனைத்து அறைக்கும் குறிப்புகள் உள்ளது. அதை சரியான திசையில் அமைக்காவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து கஷ்டம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி அடுப்பை வைப்பதற்கான சிறந்த திசை சமையலறையின் தென்கிழக்கு மூலையாகும். அடுப்பை வேறு திசையில் வைத்தால் வீட்டில் கெட்ட சக்திகள் வரும். உடல்நலக் குறைவு, பணப் பிரச்சனை அல்லது குடும்பத்தில் சண்டை போன்றவை ஏற்படலாம்.
வீட்டில் மூன்று பர்னர்கள் கொண்ட கேஸ் அடுப்பை பயன்படுத்தலாமா?
சமீப காலமாக பலரது வீடுகளில் 3 பர்னர்கள் கொண்ட கேஸ் அடுப்புகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மூன்று என்ற எண்ணுக்கு மூடநம்பிக்கை காரணமாக சிலர் அந்த அடுப்பை பயன்படுத்த கூடாது என்று சொல்கிறார்கள். இந்து மதத்தில் மூன்று என்பது மூதேவிகளை குறிப்பதாக கூறுகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்றாலும் 3 பேர் ஒன்றாக சொல்லக்கூடாது என்ற பேச்சுக்களும் இன்றும் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் ஜோதிட முறையில் அது சரியான தகவல் அல்ல. மூன்று பர்னர் அடுப்பு பயன்படுத்துவதால் வீட்டில் எந்தவொரு தீமை அல்லது அசௌகரியம் ஏற்படாது என கூறப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : செல்வம் அதிகரிக்க சமயலறையில் செய்ய வேண்டியவை




