- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
வாழைப்பூ வடை செஞ்சிருப்போம் வாழைப்பூ பொரியல் வாழைப்பூ கூட்டு செஞ்சிருப்போம் ஆனால் வாழைப்பூ வச்சு இதுவரைக்கும் சாம்பார் செய்து இருக்கவே மாட்டோம். ஆனால் ஒரு தடவை வாழைப்பூ வச்சு சாம்பார் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வாழைப்பூ கிடைச்சா அதிகமா சாம்பார் தான் செய்வீங்க. வாழைப்பூ சாம்பார் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வாழைப்பூ சாப்பிடுவது பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. எப்பவுமே ஒரே மாதிரியா வாழைப்பூவில் ரெசிபி செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா கண்டிப்பா இந்த வாழைப்பூ சாம்பார் செஞ்சு சாப்பிடுங்க. டேஸ்ட் பயங்கரமா இருக்கும். இந்த வாழைப்பூ கூட இன்னும் நமக்கு என்னென்ன காய்கறிகள் எல்லாம் வேணுமோ அதெல்லாம் போட்டுக்கலாம். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த வாய்ப்பு சாம்பார் செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த வாழைப்பூ சாம்பார் எப்படி ருசியா வைக்கிறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பூ வாங்கினால் ஒரு முறை இப்படி உருண்டை குழம்பு செய்து பாருங்கள் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்!!!
Ingredients
Method
துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் நறுக்கிய முருங்கைக்காய் வாழைப்பூ கத்தரிக்காய் சேர்த்து நன்றாக கிளறி மஞ்சள் தூள் பெருங்காயத்தூள், உப்பு சாம்பார் பொடி அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.
நன்றாக காய்கறிகள் வெந்தவுடன் இறக்கினால் சுவையான வாழைப்பூ சாம்பார் தயார்.






