- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வாழைக்காய் வச்சு சிப்ஸ் செஞ்சு இருப்போம். வாழைக்காய் பொடிமாஸ் செஞ்சிருப்போம். வாழைக்காய் வறுவல் செஞ்சிருப்போம் வாழைக்காய் பருப்பு கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் வாழைக்காய் வச்சு செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம வாழைக்காய் வச்சு ஒரு அருமையான வெரைட்டி ரைஸ் ரெசிபி செய்ய போறோம். குழந்தைகளுக்கு வெரைட்டி ரைஸ் ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறதால அவங்களுக்கு இந்த வாழைக்காய் சாதத்தை செஞ்சு கொடுத்து விடுங்க.
இதுக்கு சைடு டிஷ் செய்ய தேவை இல்லை. குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸுக்கு கொடுத்து விட்டாலே போதும் அவங்க சட்டுனு சாப்பிட்டு காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க. அவங்க சாப்பிடுவாங்களா மாட்டாங்களான்னு யோசிக்கவே யோசிக்காதீங்க சின்ன குழந்தைகள் மட்டும் இல்லாம பெரியவங்களுக்கு நீங்க இதை டிபன் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டா கூட விரும்பி சாப்பிட்டு வருவாங்க.
சில சமயங்கள்ல வீட்ல குழம்பு வைக்கிறதுக்கு எதுவும் பொருட்களும் இல்லன்னா நீங்க யோசிக்காம வாழைக்காய் இருந்தால் இந்த வாழைக்காய் சாதம் செஞ்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்கும் செஞ்சு கொடுத்த அசத்துங்க. இந்த சாதத்துல வெங்காயம் தக்காளி மசாலாக்கள் எல்லாமே சேர்க்கிறதால ஒரு சூப்பரான வாசனையோட சாப்பிடுறதுக்கு அவ்ளோ மணமாவும் ருசியாவும் இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான வாழைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி சுவையை மிஞ்சும் சுவையில் வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய வாழைக்காய் சேர்த்து எண்ணையிலேயே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து மசிய வதக்கி, வாழைக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
வாழைக்காய் நன்கு வெந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாழைக்காய் சாதம் தயார்.






