பெரும்பாலனோர் வீட்டில் பல்லிகள் கண்டிப்பாக இருக்கும். ஒரு சிலர் இந்த பல்லிகளைக் கண்டாலே பயந்து ஓடுவார்கள். வீட்டில் வண்டு கரப்பான் பூச்சி பல்லிகள் இருப்பது இயல்பானவை தான் ஆனால் இது ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது. ஏனென்றால் இந்த பூச்சிகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதிலும் ஒரு சிலர் இதனைக் கண்டாலே அருவருப்பாக நினைப்பார்கள் அதனால் இதனை விரட்டுவதற்கு தான் முயற்சி செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் பல்லி இருப்பது நல்லது தான் அது ஒரு ஓரமாக இருக்கட்டும் என்று விட்டு விடுவார்கள். பெரும்பாலும் இவைகள் வீட்டின் சுவர்கள் மூளைகளில் தான் இருக்கும் யாரையும் பெரிதாக தொந்தரவு செய்யாது ஆனால் அதை பார்த்தாலே ஒரு சிலர் அருவருப்பாக கருதுவார்கள். பல்லியை பார்ப்பது நல்லது என்றும் அதே வகையில் கெட்டது என்றும் கூறுவார்கள். அந்த வகையில் பல்லியை பார்ப்பதும் அது நம் வீட்டில் இருப்பதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் வீட்டை விட்டு துரத்த நினைக்கும் பல்லிகள் ஜோதிட ரீதியாக மங்களகரமானதாகவும் பணவரவை அதிகரிக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.
வாஸ்து உடன் தொடர்புடைய பல்லிகள்

பல்லியை லட்சுமி தேவியுடன் தொடர்பு படுத்துவார்கள். ஒரு சில மாநிலங்களில் புதிய வீட்டிற்கு வாஸ்து பூஜை செய்யும் போது வெள்ளியால் ஆன பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வார்கள். ஏனென்றால் பல்லி வீட்டிற்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது. ஏன் தமிழகத்தில் கூட பல்லிக்கு தனி கோயில் உள்ளது. ஜோதிட ரீதியாக வீட்டில் பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் இருந்தால் மிகவும் நல்லது.
பண வரவை கொடுக்கும் பல்லிகள்
எதிர்காலத்தில் அது நமக்கு பணவரவை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் தீபாவளியன்று நம் வீட்டில் பல்லியை கண்டால் அந்த வருடம் முழுவதும் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் ஒரே இடத்தில் மூன்று பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதேபோல் நீங்கள் ஒரு வீட்டிற்குள் நுழையும் போது அந்த வீட்டில் பல்லிகள் தென்பட்டால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படும்.
தேவர்களை பார்ப்பதற்கு சமமான கோயில் பல்லிகள்
பல்லியை பார்ப்பது நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. கோவில்களில் உள்ள விருச்சம் மரத்தில் பல்லியை நின்று பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமமாக கருதப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பல்லி இருந்தால் பண கஷ்டம் வருமா? அல்லது தரித்திரம் பிடிக்குமா? என்பது உங்களுக்கு தெரியுமா ?