- Prep
- 15 min
- Cook
- 25 min
- Total
- 40 min
- Serves
- 5
- Cuisine
- Indian, north india
- Course
- Breakfast, dinner
வெஜ் கடாய் அல்லது கடாய் வெஜிடேரியன் சப்ஜி என்பது ஒரு சுவையான இந்திய சைவ உணவாகும், இது ஒரு சிறப்பு கடாய் மசாலாவுடன் காரமான கிரேவியில் சமைக்கப்பட்ட காய்கறிகளின் கலவையை உள்ளடக்கியது.வெஜிடபிள் கடாய் என்பது உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய உணவகங்களிலும் காணப்படும் ஒரு பிரபலமான சைவ உணவாகும்.
இதனையும் படியுங்கள் : நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
இந்த செய்முறை வட இந்திய சமையலில் இருந்து உருவானது மற்றும் முழு உணவும் கடாயில் செய்யப்படுகிறது. கடாயில் செய்யப்படும் மிகவும் பிரபலமான சைவ சமையல் வகைகள் கடாய் பனீர் மற்றும் கடாய் காளான் ஆகும் .இந்த பதிவில் சுவையான வெஜ் கடாய் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Ingredients
Method
ஒரு வாணலியில் எண்ணை மற்றும் நெய் விட்டு காய விடவும். பின்பு எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு , உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
பின்னர் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி சிம்மில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
பின் முந்திரி விழுது, கசூரிமேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.
அதே நேரத்தில் ஒரு குக்கரில் காய்களை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும். வடிகட்டி வைக்கவும்.
ஒரு இரும்பு வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், முந்திரி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய்,சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இதில் மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். இதில் வடிகட்டி வைத்த காய்களை சேர்த்து வதக்கி க்ரேவியில்போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, நான், புல்கா, பரோட்டா போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.






