- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
இட்லி தோசை சப்பாத்திக்கு நாம் எப்பொழுதுமே ஒரே மாதிரியான குருமா சட்னி வகைகள் போன்றவைகளை தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் வீட்டிலோ வித்தியாசமாக ஏதாவது செய்து தரச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். முக்கியமாக பெரியவர்களை சமாளித்தாலும் குழந்தைகளை நம்மால் சமாளிக்க முடியாது.
அவர்களுக்காகவே அசைவ சுவையில் வெஜ் கீமா மசாலா செய்யப்போகிறோம். நிறைய காய்கறிகள் சேர்த்து செய்கின்ற இந்த மசாலா மிகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையும் மிக அருமையாகவும் இருக்கும். குழந்தைகள் பொதுவாக காய்கறிகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள் அவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி மிகவும் சுவையாக ஏதாவது செய்து கொடுத்தால் அவர்களை மிகவும் எளிதாக காய்கறிகளை சாப்பிட வைக்க முடியும்.
இந்த வெஜ் கீமா மசாலாவை இட்லி தோசை சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் குஸ்கா மற்றும் அனைத்து வகையான புலாவ் போன்றவற்றிற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அசைவம் செய்யும் முறையிலேயே நாம் இந்த வெற்றி மாமா மசாலாவை செய்வதால் அசைவம் சாப்பிட முடியாத நேரத்தில் இந்த வெஜ் கீமா மசாலாவை செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த சுவையான வெஜ் கீமா மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் :10 நிமிடத்தில் VEG – sandwich இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Ingredients
Method
வெங்காயம் கேரட் மற்றும் குடைமிளகாய் அனைத்தையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.பச்சை வாசனை போன பிறகு நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் கேரட் துருவிய பன்னீர் துருவிய காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
முந்திரியை பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து பாலோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
காய்கறி அனைத்தும் நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள முந்திரி விழுதை அதில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் போதிக்க விட்டு இறுதியாக கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும். இப்பொழுது சுவையான வெஜ் கீமா மசாலா தயார்.






