- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, Snack
சாண்டவெச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. ஒரு உணவை குறுகிய நேரத்தில் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்றால் பலரின் சாய்ஸ் சாண்டவெச் தான். சாண்ட்வெச்சில் பல வகை உண்டு, அதிலும் சிக்கன் சான்டவெச்,
இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!
மஸ்ரூம் சாண்டவெச், வெஜிடேபிள் சாண்டவெச், போன்ற வற்றை உண்டு. அதில் நாம் இன்று காண இருப்பது வெஜ் சாண்டவெச் தான். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் ஒரு பானில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், மற்றும் தக்காளி சேர்த்து தக்காளி குழைய வதக்க வேண்டும்.
வதங்கியதும் அதில் மிளகாய் தூள், சீரக தூள், பாவ் பாஜ் மசாலா, சேர்த்து மசாலா வாசனை போக நன்கு வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து நறுக்கிய கேரட், குடை மிளகாய், சேர்த்து வேகும் அளவிற்கு வதங்கி வர வேண்டும்.
அடுத்து அதில் மசித்த உருளை கிழங்கு, மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 2 அல்லது 3 நிமிடம் அப்படியே வதக்கவும்.
வெந்ததும் அடுப்பை நிறுத்தி சாட் மசாலா சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து பிரட்டில் வெண்ணை இரு பக்கமும் தடவி செய்து வைத்துள்ள மசாலாவை ஸ்டப் பண்ணி தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிரட்டை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்.
இப்பொழுது சுவையான வெஜ் சான்வெஜ் தயார்.






