Home சைவம் ரோட்டு கடை கடைகளில் செய்யும் அதே சுவையில் பரோட்டா வெஜிடபிள் சால்னா வீட்டிலேயே மிகவும் சுலபமாக...

ரோட்டு கடை கடைகளில் செய்யும் அதே சுவையில் பரோட்டா வெஜிடபிள் சால்னா வீட்டிலேயே மிகவும் சுலபமாக இப்படி செஞ்சி பாருங்க!

பரோட்டா அப்படிங்கிற உணவே நம்ம வாழ்க்கையில ஒண்ணா ஒன்றி போய்டுச்சு. பரோட்டா இல்லாம நிறைய பேர் சாப்பிடுவதே கிடையாது ஹோட்டல்களுக்கு போனால். அந்த அளவுக்கு நம்ம எல்லாருக்கும் பரோட்டாவில் அப்படி ஒரு ஈடுபாடு வந்துருச்சு. இந்த பரோட்டாவில் ஈடுபாடு வருவதற்கு முக்கியமான காரணம் அந்த பரோட்டா மேல ஊத்தி சாப்பிட சால்னா தான் அப்படின்னு சொல்லலாம்.

-விளம்பரம்-

பரோட்டாவுக்கு ஏத்த மாதிரி சைவ சால்னா அசைவ சால்னா நிறைய குருமாக்களையும் சால்னாக்களையும் இந்த பரோட்டாவுக்கு கொண்டு வந்துட்டாங்க. அந்த மாதிரி ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான வெஜிடபிள் சால்னா பரோட்டாவுக்கு எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.  இப்படி சுவையான ரோட்டு கடைகளில் கிடைக்கிற மாதிரியான வெஜிடபிள் சால்னாவுக்கு நிறைய பேரு அடிமையாகவே இருப்பார்கள் என்று சொல்லலாம்.

அவங்க சாப்பிடற பரோட்டா ரெண்டே ரெண்டா இருக்கும் ஆனால் அவங்க எடுத்துக்கிற சால்னாவோட அளவு அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சில பேருக்கு வெஜிடபிள் சால்னா மேல இருக்கிற ஒரு ஆசை ஆர்வம் அப்டிங்குறது ரொம்பவே அதிகமா இருக்கும். வெறும் சால்னாவுக்காகவே பரோட்டா சாப்பிடறதுக்கு வர்றவங்களும் இருக்காங்க அப்படிப்பட்டவர்களுக்காக ஹோட்டல்ல போய் டெய்லி சாப்பிட முடியாது இல்லையா அதுக்காக நம்ம வீட்ல சுவையா அதே மாதிரி வெஜிடபிள்ர சால்னா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

பரோட்டா வெஜிடபிள் சால்னா | Veg Salna Recipe In Tamil

பரோட்டாரெண்டே ரெண்டா இருக்கும் ஆனால் அவங்க எடுத்துக்கிற சால்னாவோட அளவு அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சில பேருக்கு வெஜிடபிள் சால்னா மேல இருக்கிற ஒரு ஆசை ஆர்வம் அப்டிங்குறது ரொம்பவே அதிகமா இருக்கும். வெறும் சால்னாவுக்காகவே பரோட்டா சாப்பிடறதுக்கு வர்றவங்களும் இருக்காங்க அப்படிப்பட்டவர்களுக்காக ஹோட்டல்ல போய் டெய்லி சாப்பிட முடியாது இல்லையா அதுக்காக நம்ம வீட்ல சுவையா அதே மாதிரி வெஜிடபிள்ர சால்னா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Vegetable Salna
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கேரட்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 கப் பீன்ஸ்
  • 1 கப் காலிஃப்ளவர்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

மசாலா அரைக்க

  • 7 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 2 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 10 முந்திரிப்பருப்பு

செய்முறை

  • முதலில் காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .
  • பிறகு அதில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,சோம்பு முந்திரி பருப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரியாணி இலையை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதில் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அதில் கொத்தமல்லி தழைகள் புதினா இலைகள் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் தேங்காய் மசாலாவை கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கலந்து விடவும் .
  • பிறகு அதில் சுத்தம் செய்து நறுக்கி எடுத்து வைத்துள்ள கேரட் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சேர்த்து கலந்து விட வேண்டும்.
  • காய்கறிகள் நன்றாக வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.கொதித்து வரும் நேரத்தில் குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கவும். நன்றாக காய்கறிகள் வெந்து இறக்கினால் சுவையான பரோட்டாவிற்கு ஏற்ற ரோட்டுகடை வெஜிடபிள் சால்னா தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Cholesterol: 88mg | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg

இதையும் படியுங்கள் : 10 நிமிடத்தில் VEG – sandwich இப்படி ஒரு முறை செய்து பாருங்க!