- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
குழந்தைகளுக்கு மதிய உணவாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்? அப்பொழுது இந்த பேபி உருளைக்கிழங்கு சாதம் செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இதுபோன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொள்ளுங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும்
இதையும் படியுங்கள் : மணமணக்கும் உருளைக்கிழங்கு தக்காளி மசியல் கூட்டு செய்வது எப்படி ?
அளவில் அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்து தர சொல்லி உங்களை வற்புறுத்துவார்கள் இதை நீங்கள் செய்வதும் குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விடலாம் அதிகமாக வேலையும் வைக்காது. அதனால் இன்று இந்த பேபி உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் அரிசியை உதிராக வேகவைக்கவும்.
பேபி உருளைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு, சேர்த்து வதக்கவும்.
இத்துடன் லேசாகச் சீவிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். உருளை வெந்ததும், வெந்த சாதம், தேவையான அளவு உப்பு, சேர்த்து புரட்டவும். இப்பொழுது பேபி உருளைக்கிழங்கு சாதம் தயார்.
குறிப்பு: ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்தால் போதும். அதிகம் சேர்த்தால் பாசுமதி அரிசி குழைந்து விடும்.






