- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக செய்து அசத்தக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் அருமையான சுவையில் இருக்கப் போகிறது. சில நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்து விடக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. பேச்சுலர்ஸ் கூட டக்குனு செய்து அசத்தக்கூடிய இந்த பீன்ஸ் சாதம் அருமையான சுவையில் வீட்டில் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் இனி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பீன்ஸ் வைத்து கூட்டு, பொரியல் போன்ற டிஷ்களை தான் நாம் இது வரை செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த பீன்ஸ் அதிகமாக யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அப்படியே சாப்பிட்டாலும். இந்த சமையல் குறிப்பு பதிவில் பீன்ஸ் வைத்து ஒரு அருமையான சாதம் ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் பீன்ஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : அடுத்தமுறை காரசாரமான ருசியில் கேரட் பீன்ஸ் குருமா இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!
Ingredients
Method
குக்கர்ல் சிறிது எண்ணெயை விட்டு வேர்கடலையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து சீரகம், வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.வதங்கியதும் தக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறிவிடவும்
பின்பு ஊறவைத்த அரிசியையும் சேர்த்து குக்கரை விசில் விட்டு இறக்கவும். வருது வைத்த வேர்க்கடலை சேர்த்து பற்றிமாறவும். சுவையானபீன்ஸ் சாதம் தயார்.






