- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
என்னதான் நிறைய காய்கறிகள் இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காய்கறி ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு கசப்பான பாகற்காய் சுத்தமா பிடிக்காது ஆனா பாகற்காய் சாப்பிடறது மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். பாகற்காயின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பாகற்காய் என்றாலே கசக்கும் என்று பலபேர் இதை சாப்பிட மாட்டார்கள். இந்த பாகற்காயை வைத்து நீங்கள் பொரியல் செய்து இருப்பீர்கள்! ஆனால் மசாலா சேர்த்து வறுவல் செய்து இருக்கிறீர்களா?
பாகற்காய் வைத்தாலே, குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பது பலரது புலம்பல். காரணம், பாகற்காயில் உள்ள கசப்பு சுவை தான். ஆனால் பக்குவமாக இதை செய்தால் செய்தால் குழந்தைகள் பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்கள். பாகற்காய் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சமன் செய்து குளுக்கோஸ் அளவி சீராக வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி, சிறுநீரகப்பை, கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் எல்லாமே அழிந்து போகும்.
பாகற்காய் வச்சு பாகற்காய் குழம்பு, பாகற்காய் தொக்கு, பாகற்காய் பொரியல், பாகற்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா எப்படி செஞ்சாலும் ஒரு சிலர் பாகற்காய வெறுக்க தான் செய்வாங்க. அந்த மாதிரி பாகற்காயை வெறுக்கிறவங்க கூட விரும்பி சாப்பிடுவதற்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான பாகற்காய் மசாலா வறுவல் செஞ்சு கொடுங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம் இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.எனவே இதில் எப்படி வறுவல் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பாகற்காய் பிடிக்காதவங்க கூட இந்த பாகற்காய் சிப்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க!
Ingredients
Method
முதலில் பாகற்காயை வட்டமாக வெட்டி அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, வெல்லம் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு பிரட்டவும்.
மசாலா நன்கு பாகற்காயுடன் சேர்த்து, தண்ணீர் வற்றி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பாகற்காய் மசாலா வறுவல் தயார்.






