- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Pakoda, snacks
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, காரசாரமாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் சுவைக்க ஆசையாக உள்ளதா? அப்படியானால் உங்கள் வீட்டில் சௌசௌ உள்ளதா? இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய பக்கோடா செய்யலாம். இந்த சௌசௌ பக்கோடா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ராஜபாளையம் ஸ்பெஷல் ருசியான பக்கோடா குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. சௌசௌ வைத்து சாம்பார், கூட்டு செய்வார்கள். ஆனால் அதை வைத்து மொறு மொறு பக்கோடா ஸ்னாக் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
Ingredients
Method
முதலில் சௌசௌ வை கேரட் துருவியில் சீவிக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வெங்காயம் முதலாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
சௌசௌ காயில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் தண்ணீர் தேவைப்படாது. தேவைப்பட்டால், 1ஸ்பூன் அளவு தெளித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறு சிறு தூண்டுகளாக எடுத்து போட்டு மீடியும் தீயில் வைத்து பொரிக்கவும்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரிக்கவும்.
அவ்வளவுதான். சுவையான சௌ சௌ பகோடா தயார்.






