- Prep
- 5 min
- Cook
- 9 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
என்னதான் நிறைய குழம்பு வகைகள் சார்ந்த உணவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆபீஸ் போறவங்களுக்கு ஸ்கூல் போறவங்களுக்கு எல்லாருக்கும் டிபன் பாக்ஸுக்கு கலவை சாதங்கள் தான் கொடுத்து விடுவோம். காரணம் அதுதான் மதியத்துக்கு சாப்பிடுவதற்கு டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் கெட்டுப் போகாம ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அந்த வகையில ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான கலவை சாதம் பிடிக்கும் தக்காளி சாதம் புளி சாதம் தயிர் சாதம் மாங்காய் சாதம் புதினா சாதம் லெமன் சாதம் காய்கறி சாதம்னு எக்கச்சக்கமான கலவை சாதங்கள் இருக்கு.
அந்த வகையில இப்ப நம்ம கொத்தமல்லி புலாவ் பாக்க போறோம். ரொம்ப வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கும் ரொம்பவே ருசியா இருக்கும். மதியத்துக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு டிபன் பாக்ஸ்ல இந்த கொத்தமல்லி புலாவ் கொடுத்துவிட்டால் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கூடவே முட்டை தொக்கு சைட் டிஷ்ஷா வெச்சா குழந்தைங்க ரொம்பவே குஷி ஆகி சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க. நம்ம கொத்தமல்லி இலையும் புதினாவும் சேர்த்து புதினா சாதம் செஞ்சிருப்போம் ஆனால் பாஸ்மதி அரிசி வச்சு செய்யக்கூடிய இந்த கொத்தமல்லி புலாவ் சாப்பிடறதுக்கே ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும்.
கொத்தமல்லி இலைகளை நம்ம ஏதாவது ஒரு உணவுல சேர்த்தா கண்டிப்பாக குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க.கொத்தமல்லி இலைகளை தனியா ஒதுக்கி வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க ஆனால் கொத்தமல்லி உடம்புல இருக்க ரத்தத்தை சுத்தம் படுத்தும். அதனால இந்த கொத்தமல்லியை குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பா சாப்பிடணும். அந்த வகையில் கொத்தமல்லியை அரைச்சு செய்யக்கூடிய கொத்தமல்லி புலாவ் சாப்டா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தமல்லி புலாவ் எப்படி டேஸ்டா செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் புலாவ் இனி இப்படி செஞ்சி பாருங்கள்! சுட சுட புலாவ் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்று வதக்கவும்.
அனைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 1 1/2 கப் தண்ணீர்சேர்த்து கொதிக்க வைக்கவும்
பிறகு பாஸ்மதி அரிசியை சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
இப்போது சுவையான கொத்தமல்லி புலாவ் அட்டகாசமான டேஸ்ட்டுடன் தயார்.






