- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
முருங்கைக்காய் வைத்து நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க. முருங்கைக்காய் புளிக்குழம்பு, முருங்கைக்காய் புளி கூட்டு இந்த மாதிரி செஞ்சு சாப்பிடும்போது செம டேஸ்டா இருக்கும் என்னதான் நிறைய சாம்பார் வைத்தாலும் முருங்கைக்காய் சாம்பார் அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஒரு சிலருக்கு முருங்கைக்காய் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இந்த முருங்கைக்காயை ஒரு சிலர் என்ன கார குழம்பு வச்சாலும் அதுல சேர்த்துப்பாங்க முக்கியமா சுண்டல் புளிக்குழம்பு பட்டாணி புளிக்குழம்பு இதெல்லாம் செய்யும் போது முருங்கைக்காய் சேர்ப்பாங்க. ஒரு சிலர் மீன் குழம்பு கறி குழம்பில் கூட முருங்கைக்காய் சேர்த்து வைப்பாங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம வெறும் முருங்கைக்காய் வச்சு அவியல் மாதிரி ஒரு சூப்பரான பொரியல் செய்ய போறோம்.
காரக்குழம்பு வெச்சு இந்த ரெசிபியை சைடிஷா வச்சு சாப்பிட்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க ரசம் சாதம் தயிர் சாதம் இதுக்கும் ரொம்ப டேஸ்டா இருக்கும். இதுல இருக்கிற மசாலாவை அப்படியே சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த ரெசிபி செய்றதுக்கு குறைவான நேரமும் குறைவான பொருட்களும் மட்டும்தான் தேவைப்படும் நிறைய பொருட்கள் தேவைப்படாது. டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் நிறையவே கேட்டு சாப்பிடுவாங்க. இது முருங்கைக்காய் சீசன் அதனால கண்டிப்பா முருங்கைக்காய் கிடைக்கும் போது இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு
Ingredients
Method
ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து முருங்கைக்காயை சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம், கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியதும் முருங்கைக்காய் சேர்த்து அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் பொரியல் தயார்.






