- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
காரக்குழம்பு சாப்பிட்டு இருக்கோம். ஆனா இது என்ன சுக்கு குழம்பு அப்படின்னா எல்லாருக்கும் டவுட்டா இருக்கும். எல்லாருக்கும் இருமல் சளி வந்தால் ஹாஸ்பிடல் போகாம வீட்டுலையே முதல்ல வீட்டு வைத்தியம் செஞ்சு பார்ப்போம். அந்த வகையில் சளி இருமலுக்கு வீட்டு வைத்தியம் நிறைய இருக்கு. தூதுவளை கசாயம் ,வெற்றிலை கசாயம், சுக்கு காபி, மசாலா டீ, அப்படின்னு எக்கச்சக்கமான வீட்டு வைத்தியங்கள் இருக்கு. ஆனா ஒரு சிலர் இந்த கஷாயம் சாப்பிட கொஞ்சம் பயப்படுவாங்க.
காரணம் இதோட டேஸ்ட் நல்லாவே இருக்காது அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா இருமல் சளி நமக்கு சரியாகும் அப்படினா நம்ம ஏதாவது ஒரு வீட்டு வைத்தியம் செஞ்சு தானா ஆகணும். அந்த வகையில நல்லா காரசாரமா சுக்கு மிளகு எல்லாம் சேர்த்து வைக்கக்கூடிய மருந்து குழம்பான சுக்கு குழம்பு எப்படி செய்யறதுன்னு தான் பாக்க போறோம். இந்த சிக்கு குழம்பு நல்லா காரசாரமா வச்சு சாதத்தில் ஊற்றி கூடவே கொஞ்சம் நல்லெண்ணெய் அதிகமா சேர்த்து சாப்பிட்டா சளி இருமல் எல்லாம் ஒரே நாள்ல காணாம போயிடும்.
சாப்பிடவும் அருமையா இருக்கும் அதே நேரத்துல நம்ம உடம்பும் சீக்கிரத்திலேயே சரியாகிடும். இந்த மருந்து குழம்பான சுக்கு குழம்பு செய்வது ரொம்ப கஷ்டம் எல்லாம் கிடையாது. நம்ம வைக்கிற கார குழம்பு மாதிரியே தான் இந்த சுக்கு குழம்பும். இப்போ நம்ம சொல்ல போற இந்த பக்குவத்துல வச்சா டேஸ்ட் அருமையா இருக்கும் அதே நேரத்தில் நம்ம நெனச்ச மாதிரியும் குழம்பு நமக்கு கிடைக்கும்.
ரொம்ப தண்ணியா வைக்காம கொஞ்சம் கெட்டியாக வைத்து சாப்பிட்டால் சாதத்துல பிரட்டி சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். இதுகூட கொஞ்சம் அப்பளம் இல்லனா வடகம் சேர்த்து சாப்பிட்டால் வேற எந்த சைடு டிஷ்ஷூம் தேவை இல்லை சூப்பரா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிட்டு முடிச்சிடலாம். இந்த சூப்பரான காரசாரமான குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : சுக்குவை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சுக்கு தண்ணீர்!
Ingredients
Method
சுக்கு மற்றும் மிளகை எண்ணெய் விடாமல் ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் என்னை விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வெங்காயத்தை முதலில் வதக்கிய பின்பு தக்காளியை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்
10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்து வைத்துள்ள சுக்கு,மிளகு பொடியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான சுக்கு குழம்பு தயார்.






