- Prep
- 10 min
- Cook
- 15 min
- Serves
- 3
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
பொதுவா எல்லாருமே பிரியாணியா விரும்பி சாப்பிடுவாங்க. அது சிக்கன் பிரியாணியா இருந்தா இன்னும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு சிலர் எந்த பிரியாணியா இருந்தாலுமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அவங்க பிரியாணி லவ்வர்ஸா இருப்பாங்க. ஆனா நம்ம ரொம்பவே குண்டா இருந்தா உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது நம்ம பிரியாணிய பெருசா சாப்பிடாம இருப்போம். அப்படி நம்ம சாப்பிடாம இருக்கும்போது நமக்கு புடிச்சத சாப்பிடாம இருக்குமே அப்படின்னு நினைச்சு நமக்கு கொஞ்சம் அழுத்தமாய் இருக்கும்.
ஒரு சிலர் எது வேணும்னாலும் சாப்பிடாம இருந்திருவாங்க ஆனா பிரியாணி சாப்பிடாம உங்களால இருக்கவே முடியாது ஆனாலும் உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு தீவிரமா இருப்பாங்க அவங்களுக்காகவே உடல் எடையை குறைக்கிறதுல பெரும் பங்கு வகிக்கிற கொள்ளு பயிர் வச்சு பிரியாணி செய்ய போறோம். கொள்ளு பயிறு வச்சு பிரியாணிக்கா அப்படின்னா ஆச்சரியமா இருக்கா அந்த டேஸ்ட் எப்படி இருக்கும்னு நினைச்சு பயமா இருக்கா கவலையே படாதீங்க இந்த கொள்ளு பயிர் வச்சு பிரியாணி செஞ்சு சாப்பிட்டீங்கன்னா ரொம்பவே டேஸ்ட்டா அட்டகாசமான ஒரு சுவையில உங்களுக்கு இருக்கும்.
அதுக்கப்புறம் நீங்க பிரியாணி சாப்பிட முடியலையே அப்படின்னு நினைச்சு கவலையே பட தேவையில்லை. நம்மளும் மத்தவங்கள மாதிரி சூப்பரான டேஸ்ட்ல பிரியாணி செஞ்சு சாப்பிடலாம். இந்தக் கொள்ளு பையன் பிரியாணியில் நம்ம நிறைய காய்கறிகள் சேர்த்து செய்ததால் டேஸ்டும் அட்டகாசமா இருக்கும் அதே நேரத்துல ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.இப்ப வாங்க இந்த டேஸ்டான கொள்ளு பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : சைவ பிரியாணி சாப்பிடணும்னு முடிவு பண்ணா இந்த அட்டகாசமான கோலா உருண்டை பிரியாணியை செய்து அசத்துங்க!!!
Ingredients
Method
முதலில் ஒரு குக்கரில் கொள்ளு பயிரை சேர்த்து அதனுடன் கல் உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமானபாத்திரத்தில் நெய் சேர்த்து தேவையான அளவு எண்ணெயும் சேர்த்து அதில் பட்டை கிராம்பு,சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
பிறகு நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது புதினா மற்றும் மல்லி இலைகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட் பீட்ரூட் பச்சை பட்டாணி காலிஃப்ளவர் அனைத்தையும் சேர்த்து நன்றாக சுருளவதக்கவும்.
பிறகு அதில் மட்டன் மசாலா மற்றும் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எண்ணெய்பிரிந்தவுடன் ஒரு ஒரு சிறிய டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பிறகு கொள்ளு பயிரையும்சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கொள்ளு பயிர் பிரியாணி தயார்.






