- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
மொறு மொறு உண்ண சுவையான கை முறுக்கு கை முறுக்கு ரெசிபி என்பது ஒரு மொறுமொறுப்பான சுவையான சிற்றுண்டியாகும், இந்த முறுக்கு அதன் வடிவத்திற்கே தனித்தன்மையானது. சீரகம் மற்றும் சாதத்துடன்பேசிருங்காய வாசனையோடு சுவையூட்டப்பட்ட இது ஒரு கப் டீ மற்றும் காபியுடன் மாலை நேர சிற்றுண்டியாக நன்றாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய பலகாரம் சுவையான சுசியம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
கை முறுக்கு ரெசிபி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய சிற்றுண்டியாகும், இது அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் வெண்ணெய், சீரகம் மற்றும் சாதத்துடன்ம் சுவைக்கப் படுகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காரைக்குடி கை முறுக்கு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காரைக்குடி கை முறுக்கு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
காரைக்குடி கை முறுக்கு செய்ய முதலில் உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் எடுத்து கொள்ள வேண்டும்.
இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும். கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்ற வேண்டும்.
கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும். சுவையான கை முறுக்கு தயார்






