- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 6
- Cuisine
- TAMIL
- Course
- Snack
நாம் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னபெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் நமது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சில இனிப்பு உணவுகள் மற்றும் காரசாரமான முறுக்கு, சீடை, சேவு, சீவல் போன்ற பலகாரங்களை குடும்பத்துடன் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ச்சியாக அந்த பண்டிகை நாளை நாம் கொண்டாடுவோம். ஆனால் தற்சமயம் நம் பாரம்பரிய பலகாரங்களில் இருந்து சில பலகாரங்கள் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : நாவில் பட்ட உடன் கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி ?
குறைந்து கொண்டே வருகிறது என்பதைவிட நாம் தொலைத்து விட்டு வருகிறோம் என்பதை நிசப்தமான உண்மை அப்படி நாம் தொலைத்து வரும் ஒரு பலகாரம் தான் சுசியம் உள்ள இனிப்பு பூரண வைத்து வெளியே மொறுமொறுப்பு தன்மை உடன் இருக்கும் இந்த சுசியமும் படிப்படியாக மறைந்து கொண்டே தான் வருகிறது. ஆகையால் வருகிற பண்டிகைகளில் இந்த சுசியத்தை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். இன்று இந்த சுசியம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: susiyam is one of the most important sweet in tamilnadu. susiyan recipe or susiyam seivathu eppadi or susiyam recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil
Ingredients
Method
முதலில் ஒரு பெரிய பவுளில் ஒரு கப் இட்லி அரிசியும் அதனுடன் ஒரு டம்ளர் உளுந்தம் பரப்பும் சேர்த்து இரண்டையும் கலந்து கொண்டு இருமுறை தண்ணீர் வைத்து அலசிக் கொள்ளுங்கள். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு பூரணம் செய்வதற்கு ஒரு குக்கரில் ஒரு கப் கடலை பருப்பை சேர்த்து அதனுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து முன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு முன்று விசில் வந்தவுடன் குக்கரில் உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு பருப்பை தனியாக எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை கப் துருவிய வெல்லத்தை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகு செய்து கொள்ளுங்கள். பின்பு வெல்ல பாகுவை வடிகட்டி வைத்து தனியாக ஒரு பவுளில் வடிகட்டிய பாகுவை வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அரை மூடி தேங்காய் துருவலை அதில் சேர்த்து நன்கு வறுக்கவும். தேங்காய் நன்கு வறுப்பட்டு மணம் வரும் பொழுது நாம் அரைத்து வைத்த கடலைப்பருப்பையும், வெல்ல பாகுவையும் இதனோடு சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பின்பு பூரணம் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கடாயை கீழே இறக்கி குளிர வைத்து உங்களுக்கு தேவையான அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். பின் நாம் ஏற்கனவே ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறுது தண்ணீர் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடுங்கள். பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து சுசியம் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பூரண உருண்டையை அரிசி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் பாரம்பரிய பலகாரம் சுசியம் இனிதே தயாராகிவிட்டது.






