- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, Kerala
- Course
- Side Dish
சின்ன வெங்காயம் வைத்து செய்யக்கூடிய இந்த சூப்பரான உள்ளி தீயல் ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த சூப்பரான ஒரு ரெசிபியை செய்வீங்க. சுடு சுடு சாதம் போட்டு அதுக்கு இந்த ரெசிபியை ஊத்தி சாப்பிடும் போது அவ்ளோ ருசியாக இருக்கும். அது மட்டும் இல்லாம பழைய சாதத்துக்கும் இந்த ரெசிபி அவ்வளவு சூப்பரா இருக்கும். அதுவும் இந்த உள்ளி தீயல் நம்ம கேரளா ஸ்டைலில் செய்ய போறதால சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். உங்க வீட்ல நிறைய பழைய சாதம் மீதம் ஆகிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி ஒரு உள்ளி தீயல் செஞ்சு பாருங்க எவ்வளவு சாதம் இருந்தாலும் நிமிஷத்துல காலியாகிடும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.
சுடு சாதத்துக்கும் இந்த உள்ளி தீயலோட சுட்ட அப்பளம் வைத்து சாப்பிட்டாலே போதும். சுவை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். வேற எந்த சைடு டிஷ்மே தேவையில்லை சைடிஷ் இல்லாம கூட சாப்பிடலாம். நல்ல காரசாரமா புளிப்பா சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். இதுக்கு மசாலா அரைச்சு சேர்க்கும்போது அதோட வாசனை குழம்புக்கு தனி ருசியை கொடுக்கும். பொதுவாவே ஒரு சிலருக்கு காரக்குழம்பு அப்படினாலே ரொம்ப பிடிக்கும். அந்த கார குழம்பு ஸ்டைல இருக்கக்கூடிய இந்த உள்ளி தீயல் இன்னும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். காரக்குழம்பு பிரியர்கள் கண்டிப்பா இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த ருசியான கேரளா ஸ்டைல் உள்ளி தீயல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தேங்காய் துருவல் கருவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து நிறம் வரும் வரை வறுக்கவும்.
பிறகு அதனுடன் மல்லித்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆறவைத்து தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கியதும் அரைத்து வைத்த விழுது சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான உள்ளி தீயல் தயார்.






