- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் சுவையான வெண்டைக்காய் சாம்பார் சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சாம்பார் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த வெண்டைக்காய் வைத்து சுவையான இந்த வெண்டைக்காய் சாம்பார் சாதத்தை செய்து விட முடியும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மத்திய உணவு சாம்பார் சாதம். ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த வெண்டைக்காய் சாம்பார் சாதத்தை செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கேரளா ஸ்டைல் சாம்பார் செய்ய மணமணக்கும் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் வெண்டைக்காயை நன்கு அலசி விட்டு ஒரு துணியில் துடைத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்கு அலசி விட்டு மஞ்சள் தூள், எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், காஷ்மீர் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி, வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். வெண்டைக்காய் கால் வாசி வதங்கியதும் புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
பின் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை வேகவைத்த பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை திறந்து கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் சாம்பார் சாதம் தயார்.






