- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sidedish
முருங்கைக்காய் வச்சு முருங்கைக்காய் காரக்குழம்பு, முருங்கைக்காய் பொரியல், முருங்கைக்காய் கூட்டு, முருங்கைக்காய் சாம்பார் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில முருங்கைக்காய் சேர்த்து செய்ற முருங்கைக்காய் புளி தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த புளி தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை இதை செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா உங்க நாக்கில் இருந்து இந்த சுவை போகவே போகாது. இட்லி தோசை சப்பாத்திக்கு கூட இது ரொம்ப ரொம்ப சூப்பரான சைடிஷா இருக்கும்.
அது மட்டும் இல்லாம புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் இது எல்லாத்துக்கும் இந்த முருங்கைக்காய் புளி தொக்கை சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும் ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். கடைசியா அந்த கடாயில் இருக்கக்கூடிய கிரேவில கொஞ்சமா சாதம் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. காரசாரமா புளிப்பா சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ஃபேவரட் ஆக மாறிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான முருங்கைக்காய் புளி தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு
Ingredients
Method
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து முருங்கைக்காயை வெட்டி சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு அரை டீஸ்பூன் வெந்தயம், பெரிய வெங்காயம் கருவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.
மிளகாய் தூள் தனியா தூள் புளிக்கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு முருங்கைக்காயை சேர்த்துக் கொள்ளவும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு அரை டீஸ்பூன் வெந்தயத்தை இடித்து சேர்க்க தேங்காய் துருவல் சேர்த்து விருப்பினால் சுவையான முருங்கைக்காய் புளித் தொக்கு தயார்.






