- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதிலும் சட்டுன்னு செய்யக்கூடிய உணவு வகைகளை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம். பொதுவாக வெரைட்டி ரைஸ் வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. அந்த வகையில் இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா?
அப்படியானால் அந்த காளானைக் கொண்டு காளான் பட்டர் சாதம் செய்து கொடுங்கள். சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு காலை வேளையில் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், காளான் பட்டர் சாதம் செய்யுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த காளான் சாதத்தை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக தயாரிக்கலாம். இதனுடன் தொட்டு சாப்பிட எதுவும் பெரிதாக தேவையிருக்காது நீங்கள் விரும்பினால் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இல்லையென்றால் இந்த காளான் சாதத்தை சிக்கன் வறுவல், உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வறுவல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்போது சுவையான இந்த காளான் பட்டர் சாதத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மஷ்ரூம் சுக்கா சாப்பிடணும் போல இருந்தா இதே மாதிரி செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கிய காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.
காளான் நன்கு வெந்து வந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதங்கியதும் உப்பு, சீரகத்தூள், மல்லி தூள், கஸ்தூரி மேத்தி, வினிகர், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து நறுக்கிய வெங்காயத்தாள், வெண்ணெய் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் பட்டர் சாதம் தயார்.






