- Prep
- 5 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- dinner, LUNCH
பாசிப்பயறு கூட்டு, பாசிப்பயறு சாம்பார் என்று வைத்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் 10 நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு ரசம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு ரசம்போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. . பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
தினமும் சாம்பார்,புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு ரசம் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே கிராமத்து பக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் பாசிப்பயறு கடையில் செய்வார்கள் . இந்த பாசிப்பயறு ரசம் சுவையும் அருமையாகஇருக்கும், ஆரோக்கியமானதும் கூட. வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : அடுத்தமுறை காரசாரமான ருசியில் வயல் நண்டு ரசம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
பாசிப்பயறை சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்கவும், வறுத்த பயறு, ஒரு வரமிளகாய், மிளகு, சீரகம், மல்லி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், பூண்டு, உப்பு இவை எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
6 விசில்வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.குக்கரில் சூடு ஆறியதும் குக்கரை திறந்து பருப்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
வெந்தபயறை லேசாக கடைந்து விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் தாளித்து பயறில் போடவும்.
இந்த பாசிப்பயறு சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். ரசம் செய்யும் முறை: கடுகு, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றி தக்காளியையும் கரைத்துவிட்டு ரசப்பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்
ரசம் செய்யும் முறை: கடுகு, வரமிளகாய், பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றி தக்காளியையும் கரைத்துவிட்டு ரசப்பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும்
ரசம் கொதித்ததும் பருப்பு தண்ணீரை ஊற்றி ஒருகொதி வந்ததும் மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்






