- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான ஒன் பாட் ரெசிபியான புலாவ் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். புலாவ் அப்படின்னாலே நமக்கு நிறைய வகையான புலாவ் ஞாபகத்துக்கு வரும் நம்மளும் முட்டை புலாவ், வெஜிடபிள் புலாவ், மட்டன் புலாவ் அப்படின்னு எக்கச்சக்கமான புலாவ் வகைகள் செஞ்சு சாப்பிடுவோம்.
அந்த வகையில் இந்த பதிவில் சுவையான பாலக் சோயா புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம். ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 15 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும். வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி குழம்பு சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா.
அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த மாதிரி தேடுபவர்களுக்கு ஈசியான ரெசிபி தான் இது. குழந்தைகள் லஞ்ச் பாக்ஸூக்கு இந்த ரெசிபி செய்து கொடுத்து விடுங்கள் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்போது சுவையான பாலக் சோயா புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : தக்காளி தேங்காய் பால் புலாவ்
Ingredients
Method
முதலில் சோயாவை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின் தண்ணீர் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து அதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஊற வைத்த சோயா மற்றும் நறுக்கிய பாலக் கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஊற வைத்துள்ள அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர், நெய் மற்றும் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பாலக் சோயா புலாவ் தயார்.






