- Prep
- 5 min
- Cook
- 8 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Fry, starters
உருளைக்கிழங்கு வறுவல் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவலை நம்ம ரொம்ப சுவையாக வறுத்து அரைச்ச பண்ணப்போறோம். இந்த வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் நல்ல சைடிஷ் எல்லா சாதத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான வறுத்த அரைச்ச உருளைக்கிழங்குவறுவல் எப்படி ஈசியா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாமா.
உருளைக்கிழங்கு அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுல இந்த மாதிரி உருளைக்கிழங்கு வறுவல மாதிரி செய்யும் போது அது ரொம்பவே நல்லா இருக்கும். உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க.அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல உருளைக்கிழங்கு செய்து கொடுத்திருப்போம். ஆனால் இந்த மாதிரி நம்ம ஊர்களில் செய்கிற வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்து பாத்தீங்கன்னா அவங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
எப்பவும் ஒரே மாதிரியான வறுவல் செய்வதற்கு இந்த மாதிரி பண்ணி கொடுத்தா உங்களுக்கு இந்த மாதிரி வறுத்து அரைச்ச மசாலா வச்சு நல்ல பேபி உருளைக்கிழங்கு செய்து கொடுக்கும்போது ரொம்பவே ருசியாவும் விரும்பியும் சாப்பிடுவாங்க. அப்புறம் அடிக்கடி இதே மாதிரி வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் செய்து கொடுங்க அப்படின்னு உங்களை கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. சரி எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எப்படி இந்த வறுத்து அரைச்ச உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள்: சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான உருளைக்கிழங்கு பொடிமாஸ் அவசியம் இப்படி செய்து பாருங்கள்!
Ingredients
Method
முதலில் பேபி உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தனியா விதைகள், சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மிளகு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்து ஆற வைத்த பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய்ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துநன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து நன்றாககலந்து விடவும்.
பின்பு அதில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்துநன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
மசாலா சேர்த்து நன்றாக பச்சை வாசனை போன பிறகு அதில் இறுதியாக சோம்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் கலந்து வைத்து இறக்கி சூடாக பரிமாறினால் வறுத்து அரைத்த வறுத்து அரைத்த உருளைக்கிழங்கு தயார்.






