- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
உங்கள் காலை உணவை மிகவும் சுவையான உணவாக மாற்ற இந்த ரவா கிச்சடியை ஒரு முறை செய்து பாருங்கள். இப்படி ஒரு தடவை நீங்கள் ரவா கிச்சடியை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த ரவா கிச்சடி மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படியுங்கள் : தாருமாறான மசாலா பொங்கல் செய்வது எப்படி ?
மேலும் நாம் சமைக்கும் இந்த ரவா கிச்சடியில் அதிக அளவு காய்கறி சேர்த்து சமைப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் ஒரு மாறுதலாக இந்த உணவை வாரம் ஓரு முறை நீங்கள் செய்து சாப்பிடலாம். இன்று இந்த சுவையான ரவா கிச்சடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
English Overview: Rava kitchadi is one of the most important dishes in india. rava kitchadi recipe or rava kitchadi seivathu eppadi or ravs kitchadi in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் வைத்திருக்கும் ரவையை கடாயில் சேர்த்து நன்கு வறுக்கவும். ரவையில் இருந்து நல்ல மணம் வரும் வரை வறுத்து அதை வேறொரு பவுளில் மாற்றிக் கொள்ளவும்.
பின்பு கடாயை அடைப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எணாணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு நான்கு கிளறி விடவும்.
அதன் பின் கீரிய பச்சை மிளகாய், பொடி பொடியா நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை மற்றும் முந்திரி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி அதன் பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், மஞ்சள் தூள் பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி அதன் பின் நறக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி வெந்து மென்மையாக மசிந்து வந்ததும், நாம் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளான கேரட், பீன்ஸ் மற்றும் ஊறவைத்த பட்டாணியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். அதன் பின் நீங்கள் எடுத்து இருக்கும் ரவையின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன் நாம் வறுத்து வைத்திருககும் ரவையை சேர்த்துக் கொண்டே கிளறி விடவும் ரவை கட்டியாகாமல் கிளறி விட வேண்டும்.
ரவை தண்ணீரை நன்றாக உறிந்து கட்டியாக வந்தவுடன் நெய் சேர்த்து இறக்கி விடவும் அவ்வளவுதான் சுவையான ரவா கிச்சடி இனிதே தயாராகிவிட்டது.






